அர்ச்சனா கேட்ட கேள்வி, பதிலடி கொடுத்த சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவிடம் அர்ச்சனா நீ எதுக்காக என்ன இவ்வளவு தூரம் வெறுக்கிற என்று தெரியவில்லை என்று கேட்கிறார். தெரிஞ்சுகிட்டு மட்டும் நீ என்ன பண்ண போற என்று சூர்யா பதிலடி கொடுக்கிறார்.
மறுபக்கம் நந்தினி இடம் நீ பார்த்த கடைசி வீடியோ இதுதான் இதுல தான் அந்த ரெண்டு பேர பார்த்ததா சொன்ன நீ பாரு என்று காண்பிக்க அந்த நேரம் பார்த்து சுரேகாவின் காதலர் அர்ஜுன் வருகிறார். உடனே டென்ஷன் ஆன சூர்யா, நீ எதுக்குடா இங்க வந்த என்று கேட்டு, உன்ன தான் இந்த வீட்டு பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல என்று அடி வெளுத்து வாங்குகிறார் உடனே குடும்பத்தினர் அனைவரும் பதறுகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
