சுதாகரின் வலையில் சிக்கிய கோபி, சந்தோஷப்பட்ட பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகரின் வலையில் கோபி சிக்க,மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரண்ட் நினைத்து சந்தோஷப்பட்டு உள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 31-03-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 31-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா மற்றும் அமிர்தா இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அமிர்தா ரெஸ்டாரன்ட்காக மிரட்டி சென்று போன சுதாகரின் டீடைல்ஸ் பற்றி போனில் போட்டு பார்த்து இவர் பேர்ல நிறைய ரெஸ்டாரன்ட் இருக்கு பிசினஸ் அதிகம் பண்ற அதனால தான் உங்கள மிரட்டிட்டு போயிருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்க நீங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுங்க என்று அமிர்தா சொல்லிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து இனியா வந்து உட்கார யார் மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க போறீங்க என்று கேட்க அமிர்தா பேச வர பாக்யா சொல்ல வேண்டாம் என சொல்லி விடுகிறார்.

என்ன விஷயம் நீங்க சொல்லுங்க அக்கா என்று கேட்க யார் வந்து மிரட்டிட்டு போனது என்று கேட்கிறார். பிறகு நடந்த விஷயங்களை இனியாவிடம் சொல்ல அவருடன் டீடைல்ஸ் கொடுங்க நான் ரிப்போர்ட் கலெக்ட் பண்றேன் என சொல்லி போனை வாங்க பாக்கியா வேண்டாம் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் மிரட்டிட்டு போறது உனக்கு சின்ன விஷயமாமா என்று சொல்ல, நான் பார்த்துக்கொள்கிறேன் இனியா என்னால் முடியவில்லை என்றால் கண்டிப்பா உன்கிட்ட வந்து சொல்றேன் என சொல்லுகிறார் சரி உன் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு இந்த வேலை புடிச்சிருக்கா என்று கேட்க புடிச்சிருக்குமா என்று சொல்லுகிறார் அதுக்கப்புறம் என்ன பண்றது ஐடியா இருக்கு என்று சொல்ல இந்த வேலையிலேயே பர்மனென்ட் ஆயிட்டு எடிட்டர் ஆகணும் என்று சொல்லுகிறார். அப்போ படிக்கலையா என்று கேட்க படிச்சதே வேலைக்கு போகத்தானே இன்னும் எதுக்கு படிக்கணும் என்று சொல்லுகிறார் அப்படி இல்லை இனியா என்னோட கல்யாண பத்திரிக்கையில என் பேருக்கு பின்னாடி எதுவுமே இல்ல ஆனா உங்க அப்பாவோட பேருக்கு பின்னாடி எம்பிஏ என்று இருந்தது.அப்போல நான் ரொம்ப ஆசைப்பட்டு வருத்தப்பட்டு இருக்கேன் அதனால உன் கல்யாணத்துல உன் கல்யாண பத்திரிக்கை பக்கத்துல இரண்டு டிகிரி ஆவது இருக்கணும் என்று சொல்ல இனியா எனக்காக இல்லனாலும் என் செல்ல அம்மாவுக்காக நிறைவேற்றுவேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் கோபி ஈஸ்வரி செழியன் மூவரும் மேட்ரிமனியில் இனியாவிற்காக பார்த்துக் கொண்டிருக்க ஈஸ்வரி நீங்க மட்டும் பாருங்க அப்ப நான் போய்ட்டு வா என்று கேட்கிறேன் நீங்க மட்டும் ஏதோ சைகையில பேசுகிறீர்கள், எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது என்று சொல்ல எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டு உங்களுக்கு காட்டுறோம் என்று சொல்லுகிறார். ஒரு ஒருத்தராக காட்ட ஈஸ்வரி எல்லாத்தையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். உடனே நம்ம தரகர் கிட்டயே பேசிடலாமா என்று ஈஸ்வரி சொல்ல அதற்கு ஈஸ்வரி இன்னும் நிறைய இருக்கு பாட்டி நம்ம பாதி கூட பாக்கல இன்னும் ரெண்டு நாள்ல பொறுமையா பார்க்கலாம் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து செந்தில் கோபிக்கு போன் போட்டு டின்னருக்கு வருமாறு கூப்பிடுகிறார். என்ன விஷயம் என்று கேட்க அதெல்லாம் முக்கியமான விஷயம் நேர்ல வா என்று கூப்பிட்டு போனை வைக்கிறார்.

மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கூட்டம் அதிகம் இருப்பதை பார்த்து சந்தோஷபடுகிறார். இதே மாதிரியே இருந்தா நான் பேங்க்ல இருக்குற லோன் எல்லாம் அடைச்சிடுவேன் என்று சொல்ல அதற்கு செல்வி அந்த ஆள் திருப்பியும் வீட்டில் வந்து மிரட்டியதா கேள்விப்பட்டேன் என்று சொல்ல அமிர்தா நான் தான் சொன்னேன் என்று சொல்லுகிறார். இவ்வளவு நல்லா ரீச் பண்ண ரெஸ்டாரன்ட் எப்படி தூக்கி கொடுக்க முடியும் என்று சொல்ல இது என்னோட ராசியான ரெஸ்டாரன்ட் இது என்னோட லைப்ல அடுத்த இடத்துக்கு கொண்டு போகும் என்று பாக்யா சந்தோஷப்படுகிறார்.

செந்தில் சுதாகர் வீட்டில் வெளியில் காத்துக் கொண்டிருக்க கோபி ரெஸ்டாரன்ட்கோ இல்ல பாருக்கு கூப்பிடுவேன்னு பார்த்தா உடனே பிளான மாத்தி இங்க வர சொல்லி இருக்க இது யாரோட வீடு என்ன விஷயம் என்று கேட்க அவர் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். கோபி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க செந்தில் அவரே வந்து சொல்லுவாரு என்று சொல்லி உட்கார வைக்க சுதாகர் வந்து கோபியிடம் பேசுகிறார். சுதாகர் கோபியிடம் என்ன கேட்கிறார்?அதற்கு கோபியின் சம்மதம் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 31-03-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 31-03-25