ஸ்ருதியிடம் பணம் கேட்ட மனோஜ், ரவி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மனோஜ் ஸ்ருதியிடம் பணம் கேட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதியும் ரவியும் வெளியில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் வருகின்றனர். மனோஜ் ரவியிடம் எனக்கு 70 லட்சம் உதவி பண்றியா என்று கேட்க நான் எப்படி பண்ண முடியும் என்கிட்ட இருந்தா நான் ரெஸ்டாரன்ட் வச்சிருக்க மாட்டானா என்று ரவி கேட்கிறார்.
உன்கிட்ட இல்லைன்னு தெரியும் உன்னோட மாமனார் கிட்ட வாங்கி கொடு என்று கேட்கிறார். எனக்கு முத்து எந்த உதவியும் பண்ண மாட்டான் நீயாவது பண்ணு என்று கேட்க ரவி எனக்கு சின்ன வயசுல இருந்து படிக்கிறதுக்கும் சரி, எதுக்கும் சரி ஒரு சின்ன ஹெல்ப் பண்ணிருக்கியா நீ ஒரு சட்டை வாங்கி கொடுத்திருக்கிறாயா? எதுவுமே நீ எனக்காக பண்ணதில்ல முத்து தான் எனக்கு படிக்க காசு அனுப்பி இருக்கான் என்றெல்லாம் சொல்லுகிறார். உடனே மனோஜ் எனக்கு அப்போ பெருசா சம்பாதிக்கல இதுக்கு மேல நான் நல்லா பாத்துப்பேன் என்று சொல்ல, ரவி அவர்கிட்ட போய் என்னால காசு வாங்க முடியாது என்று சொல்லுகிறார்.
உடனே ஸ்ருதியிடம் நீ ஒரே பொண்ணு தானே எப்படி இருந்தாலும் அந்த பிராப்பர்ட்டி உனக்கு தானே வரப்போகுது அதனால கொஞ்சம் கேட்டு வாங்கி கொடுங்க என்று சொல்ல, அது எனக்கே வரதா இருந்தாலும் இல்லனாலும் நான் கவலைப்பட மாட்டேன் நான் எதையும் கேட்டால் எங்க வீட்ல ஹாட்டா வாங்க. அவங்களே விருப்பப்பட்டு கொடுத்தா ஓகே என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் நான் வட்டி கூட கொடுக்கிறேன் என்று சொல்ல ரவி என்ன பாத்தா வட்டிக்காரன் மாதிரி தெரியுதா என்று கேட்கிறார். உன் மாமனார் வீட்ல நீ கேட்டா தர மாட்டாங்களா என்று ரவியிடம் கேட்க அவங்க நான் கேட்காமலேயே ஹோட்டல் வைக்கிறதுக்கு பிளாங்க் செக் கொடுத்தாங்க அதைவே நான் திருப்பி கொடுத்துட்டேன் என்று சொல்ல ஒரு கட்டத்திற்கு மேல் மனோஜ் கோபமாகி அங்கிருந்து சென்று விடுகிறார் உடனே உள்ளே சென்று எப்படியாவது இந்த வீட்டை வாங்கணும் என்று மனோஜ் மற்றும் ரோகினி பேசிக்கொள்கின்றனர். ரோகினி நீங்க வீடு வாங்கறதுக்கு எல்லாரும் பொறாமை படுறாங்க என்று எல்லாம் பேசுகிறார்.
மறுபக்கம் முத்துவும் மீனாவும் ஸ்விம்மிங் ஃபுல் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க உனக்கு இந்த வீடு புடிச்சிருக்கா என்று முத்து கேட்கிறார். புடிக்கல என்று மீனா சொல்ல இவ்வளவு பெரிய வீடு பிடிக்கலையா என்று கேட்கிறார் வீடு பெருசா இருந்தாலும் இங்க இருக்கிறவங்களோட மனசு சின்னதா இருக்கு நான் வீடு பிரிய கூடாதுன்னு தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல, அத்தை ஏற்கனவே இந்த வீடு ரொம்ப புடிச்சி இருக்குன்னு சொல்றாங்க அவங்க இங்க வந்துட்டாங்கனா மாமாவும் வந்துருவாரு என்று சொல்ல அப்பா அப்படியெல்லாம் வர மாட்டாரு அம்மா கூப்பிட்டா கூட அப்பா வரமாட்டாரு என்று முத்து உறுதியாக சொல்லுகிறார்.இருவரும் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஜீவா போன் பண்ணுகிறார். நாளைக்கு ஏழரை மணிக்கு என்னை ஏர்போர்ட்ல பிக்கப் பண்ணி இருக்கீங்களா என்று சொல்ல கண்டிப்பா வந்துருவேன் மேடம் என்று சொல்லுகிறார். பிறகு அங்கே கொஞ்ச நேரம் மு, மீனாவும் பேசிக்கொள்கின்றனர்.
மறுபக்கம் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் ரூமில் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க, ரவி பியூச்சர்ல நம்பளும் இது மாதிரி வீடு வாங்கலாமா என்று கேட்கிறார். எனக்கு இது மாதிரி வீடெல்லாம் வேணாம் அபார்ட்மெண்ட்ல தான் வீடு வேணும் என்று கேட்கிறார். இப்படி இருந்தால் லோன்லியா இருக்கும் ஆனா அப்பார்ட்மெண்ட்ல இருந்தா நிறைய பிரெண்ட்ஸ் கிடைப்பாங்க ஜாலியா இருக்கோ ஏதாவது ஒரு பங்க்ஷன் நான் செலிபிரேட் பண்ணலாம் என்றெல்லாம் கேட்கிறார் நான் பொறந்ததுல இருந்து இந்த மாதிரி வீட்லதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் அதனால இது மாதிரி வேண்டாம் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் விஜயா ரோகினியை இழுத்து வந்து உண்மை தெரிந்த படி வெளியே தள்ளுகிறார்? என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.