வீட்டை விட்டுப் போக முடிவெடுத்த ராதிகா, காம்படிஷனுக்கு தயாராகும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
வீட்டை விட்டு போக முடிவெடுத்துள்ளார் ராதிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி . இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்திலிடம் கோபி பாக்கியா குணத்தை பற்றி எனக்கு தெரியாமலே போயிடுச்சு இப்போ எல்லாமே தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் பண்ணது இவ்ளோ பெரிய தப்புன்னு தெரியுது என்று பாக்யாவை சப்போர்ட் பண்ணி பேசுகிறார். மறுபக்கம் ராதிகா துணி எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க ராதிகாவின் அம்மாவின் வீட்டை விட்டு போய் தான் ஆகணுமா என்று கேட்கிறார்.
நான் எதுக்காகவும் என்னோட முடிவை மாத்திக மாட்டேன். அவரே வருவாருன்னு என்னால காத்துகிட்டு ஏமாற முடியாது மயூவ கஷ்டப்படுத்த முடியாது என்று சொல்ல, ராதிகாவின் அம்மா உனக்கு மட்டும் ஏண்டி சந்தோஷமே கிடைக்க மாட்டேங்குது ஏற்கனவே ஒரு கல்யாணம் பண்ண அவன் குடிச்சிட்டு நிம்மதி இல்லாம பண்ணா சரி இவரை கல்யாணம் பண்ணாலாவது சந்தோஷமா இருப்பேன்னு பார்த்தா இவரு அதுக்கு மேல இருக்காரு என்று சொல்லி கஷ்டப்படுகிறார் எப்படி கரை சேர்க்க போற என்று சொல்லி பீல் பண்ணுவேன் கண்கலங்குகிறார்.
மறுபக்கம் இனியா டான்ஸ் கம்பெட்டிஷனுக்கு பரபரப்பாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்யா வர எங்கம்மா போயிருந்தாய் என்று கேட்க கோவிலுக்கு போயிட்டு வந்தேன் என்று சொல்லி விபூதி வைக்கிறார். டைம் ஆயிடுச்சு சீக்கிரம் போகணும் போகணும் என்று டென்ஷனாக இருக்க சரி நீங்க போங்க என்று சொல்லி அவர்களை பாக்கியா அனுப்பி வைக்கிறார். நான் கேப்ல வர என்று சொல்ல அவர்களும் சரி சீக்கிரம் வந்துருமா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்லிவிட்டு இனியா கிளம்புகிறார்.
அனைவரும் காம்பெடிஷன் நடக்கும் இடத்திற்கு வர இனியா அவர்களை வந்து பார்க்கிறார். ஜெயிக்கலனா என்ன திட்ட மாட்டிங்களா என்று கேட்க கோபி நீ கண்டிப்பா ஜெயிப்ப அப்படியே தோத்தாலும் எந்த பிரச்சினையும் இல்ல தைரியமா ஆடு என்று ஆறுதல் சொல்லுகிறார்.அனைவரும் ஆல் தி பெஸ்ட் சொல்ல அந்த நேரம் பார்த்து பாக்கியா வர நீ எங்க கூட வரல என்று கோபப்பட அதுதான் கரெக்டான டைம்ல வந்துட்டேன்ல விடு என்று சொல்லுகிறார்.
இனியா எப்படி டான்ஸ் ஆடுகிறார்? ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? கோபி செய்வது என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.