நந்தினி சொன்ன வார்த்தை,விஜி சொன்ன அட்வைஸ்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி போன் பேசிவிட்டு போட்டோ அனுப்பி இருக்கீங்களா என்று கேட்டு போட்டோவை பார்த்துக் கொண்டிருக்கிறார்.இதனை கவனித்த அருணாச்சலம் உள்ளே வந்து நிற்க சுந்தரவல்லி போனை ஆப் செய்கிறார். என்ன பாத்துகிட்டு இருந்த என்று கேட்க ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளிக்கிறார். நீ ஏதோ மறைக்கிற போன கொடு என்று கேட்கிறார். சுந்தரவல்லி கொடுக்காமல் இருக்க என்ன ரகசியம் என்று நானும் பார்க்கிறேன் என்று போனை வாங்கி பார்க்க போனில் பொண்ணுங்க போட்டோவா இருக்கு இதை எதுக்கு பாத்துகிட்டு இருக்க என்று கேட்கிறார். உங்க வருங்கால மருமக சூர்யாவுக்காக பொண்ணு பாக்குற, சூர்யாவிற்கு இரண்டாவது கல்யாணமா என்று கேட்க அது கல்யாணமே கிடையாது என்று சொல்கிறார்.
ஏற்கனவே நம்ம வீட்ல மருமகள் இருக்கா என்று சொல்ல இந்த வீட்ல அவ மருமகளா இருக்க தகுதி இருக்கா என்று கேட்கிறார். எந்த வீட்டிலயும் இது மாதிரி நடக்காது என்று அருணாச்சலம் சொல்ல, ஆமா நடக்காத வேலைக்காரியா மருமகளா ஆக்க மாட்டாங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். நீ பொண்ணு பாக்குற அளவுக்கு எல்லாம் போவேன்னு நான் நினைக்கவே இல்ல இது மாதிரி அசிங்கமா பண்ணாத என்று திட்ட ஆனால் சுந்தரவல்லி சூர்யாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஒரு நாள் பைத்தியம் புடிச்சு அலைய தான் போற என்று சொல்லி அருணாச்சலம் கோபமாக சென்று விடுகிறார்.
சுந்தரவல்லி இந்த அளவுக்கு யோசிக்க ஆரம்பிச்சிட்டா நந்தினி ஒரு பக்கம் இந்த வீட்டோட மருமக என்பதை உணர மாட்டிக்கிறார் சூர்யா குடிப்பதை மட்டும் வழக்கமா வச்சுக்கிட்டு அவங்க அம்மாவ வெறுப்பேத்திக்கிட்டு இருக்கான் ஒன்னும் புரியல என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சூர்யா வர அருணாச்சலம் தூங்கலையா என்று கேட்கிறார் நந்தினி தூங்கிட்டாளா என்று கேட்க நான் கவனிக்கல டாடி என்று சொல்ல அருணாச்சலம் திட்டுகிறார். சூர்யாவிற்கு அருணாச்சலம் அட்வைஸ் கொடுக்க நீங்க சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல காலைல சொல்லுங்க நான் கேட்கிறேன் என்று சொல்ல புரியலல போய் மீதி இருக்கிறத குடித்துவிட்டு படுத்துக்கோ என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.
கல்யாணம் நந்தினியிடம் நிஜமாகவே உனக்கு சம்பளம் கொடுத்துட்டேன்னு சொன்னாங்களா என்று சொல்ல ஆமான அப்படித்தான் சொன்னாங்க என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினிக்கு புனிதா போன் பண்ணி பேசுகிறார். நான் என் பிரண்டு கிட்ட இருந்து ஒரு போன் வாங்கி இருக்கேன் காசு கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடலாம் என்று சொல்ல சரி அம்மாச்சி வேலைக்கு போக வேணாம்னு சொல்லு என்று சொல்லுகிறார். அம்மாச்சி வேலைக்கு போறத ஏன் சொல்லல என்று கோபப்படுகிறார். நீ கஷ்டப்படுவன்னு தான் அக்கா சொல்லல என்று புனிதா சொல்லுகிறார். பிறகு புனிதாவின் படிப்பு பற்றி விசாரிக்க அதற்கு எக்ஸ்ட்ரா அதிகமாக காசு ஆவது இரண்டு லட்ச ரூபாய் கிட்ட வரும்னு சொல்றாங்க என்று சொன்ன சரி பார்க்கலாம் என்று சொல்லி போனை வைக்கிறார்.
ஏம்மா சோகமா இருக்க என்று கல்யாணம் கேட்க படிக்கணும் பணம் செலவாகும் என்று தங்கச்சி சொல்ற அண்ணா அதுதான் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்ல உடனே மீண்டும் புனிதா போன் போட்டு அக்கா சம்பளம் அதிகமா வந்திருக்கு என்று கேட்கிறார் எவ்வளவு என்று நந்தினி கேட்க நீ இருபதாயிரம் வரும் என்று தான சொன்ன ஆனா 5 லட்சம் வந்துருக்கு என்று சொல்லுகிறார். யார் போட்டு இருக்காங்க என்று கேட்க முதலாளியை அதான் போட்டுருக்கார் என்று புனிதா சொல்லுகிறார். உடனே நந்தினி 20,000 தவிர மீதி இருக்கிற காசை அதே அக்கவுண்டுக்கு ரிட்டன் அனுப்பிடு என்று சொல்ல புனிதாவும் அனுப்பி விடுகிறார்.
இது மட்டும் இல்லாம இனிமே 20 ஆயிரத்த தவிர எவ்வளவு எக்ஸ்ட்ரா வந்தாலும் திருப்பி அனுப்பிடு என்று சொல்லி ஃபோனை வைக்க அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வர நந்தினி ஓடி வருகிறார். உங்க அக்கவுண்ட்ல பணம் வந்திருக்கா பாருங்க என்று சொல்லி பார்க்க சொல்லுகிறார். என்னமா திருப்பி அனுப்பி இருக்க என்று கேட்க இல்லையா என் சம்பளம் எடுத்துகிட்டேன் என்று கேட்கிறார். எனக்கு சம்பளத்துக்கு மேல ஒரு ரூபா கூட எனக்கு வேணாம் என்று சொல்ல அருணாச்சலம் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். ஏமா இப்பதான் படிப்பு செலவுக்கு இல்லன்னு குழம்பிக்கிட்டு இருந்தா அதுக்குள்ள எதுக்கு ஐயா கொடுத்த காசை திருப்பி அனுப்பினேன். நீங்க தானே ஏதாவது ஹெல்ப் பண்ணனும் ஏதாவது வேலை இருந்தா எனக்கு சொல்லுங்க என்று சொல்ல, அதெல்லாம் முடியவே முடியாது ஐயா என்ன நினைப்பாரு என்று சொல்லிவிட்டு கல்யாணம் சென்று விடுகிறார்.
மறுபக்கம் விஜி கணவரை காய்கறி வாங்கிட்டு வாங்க என்று சொல்லி அனுப்ப அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வீட்டுக்கு வருகிறார். வாங்க அங்கிள் சொல்லிருந்தால் நானே வந்திருப்பேனே என்று சொல்லுகிறார். ஏன் நான் வரக்கூடாதா என்று கேட்க எங்க வாழ்க்கையே நீங்க போட்ட பிச்சை என்று சொல்ல அப்படி எல்லாம் ஏம்பா பேசுற வேலை செய்ற சம்பளம் கொடுக்குற அவ்வளவுதானே என்று சொல்லுகிறார். ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். ஆமாம்பா பிரச்சனை தான் சூர்யாவும் சூர்யா பண்றதையும் பற்றிய பேசுகிறார் அருணாச்சலம். சுந்தரவல்லி நந்தினியை வீட்டை விட்டு அனுப்புவதிலேயே இருக்கா இந்த சூர்யா சுந்தரவல்லி வெறுப்பேத்துறதுக்காக பொண்டாட்டின்னு சொல்றானே தவிர அவன் அப்படின்னு நினைக்கல நந்தினியோ எப்ப வீட்டை விட்டு போயிடுவேன்னு சொல்லிட்டு இருக்காத அதனால இவங்களோட கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணலாம்னு இருக்கேன் என்று சொல்ல நந்தினி வந்து நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நந்தினி விஜியிடம் அது நான் வாழற வீடாகவும், அவர் என் புருஷன் ஆகவும் என்னால நினைச்சு கூட பாக்க முடியல என்று சொல்லுகிறார்.
அருணாச்சலத்திற்கு விஜி போன் போட்டு நீங்க கேட்ட எல்லா டீடெயில்ஸும் அவர் உங்களுக்கு அனுப்பி விட்டார் என்று சொல்லு நன்றி சொல்லுகிறார்.
விஜி நந்தினி இடம் என்ன இருந்தாலும் நீ சூர்யா அண்ணனோட வைஃப் அந்த வீட்டோட மருமக உன்னை எப்படி வேலைக்கு போக விட்டுருவாங்க என்று சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.