சிகரெட் புகைத்த ஜோதிகா கேரக்டர் பற்றி, சிவகுமாரிடம் கேட்காதீர்கள்: நெட்சன்ஸ் கமென்ட்ஸ்
ரீல் வேற, ரியல் வேறதான். இருந்தாலும் சில நேரங்களில் சர்ச்சை பெரிதாகி விடுகிறது. அப்படியொரு சர்ச்சையை காண்போம்..
சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா 2 குழந்தைக்கு தாயான பின்னர், தன் கணவரின் தயாரிப்பிலேயே ’36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஜோதிகாவின் இந்த முடிவில் சிவகுமாருக்கு விருப்பமில்லை என்றாலும், இந்த படத்திற்காக இவருக்கு கிடைத்த பாராட்டுக்கள் அவரின் மனதை மாற்றியது.
இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கதையின் நாயகியாக நடிக்க துவங்கினார். பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்திலும் பாராட்டு பெற்றார். இந்நிலையில், ஹீரோயின்ஸ்க்கான ஸ்கிரிப்ட்டில் நடிக்கும் ஆர்வத்திலும், தனது வயதான தாய்-தந்தையை கவனிக்கப்பதற்காகவும் மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, ஏற்கனவே நடித்த சைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘டப்பா கார்டெல்’ என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடரில் ஜோதிகா சர்ச்சைக்கு விதமான காட்சியில் நடித்துள்ளது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதாவது, இந்த வெப் தொடரில் ஜோதிகா, சிகரெட் புகைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இணையவாசிகள், ‘சிகரெட் புகைத்தவாறு நடிக்கும் ஜோதிகா கேரக்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என சிவகுமாரிடம் யாரும் கேள்வி கேட்காமல் இருந்தால் சரி. எந்த குழப்பமும் நேராது’ என கருத்து தெரிவித்து வருகின்றனர்.