‘கூலி’ பட சூட்டிங்கில், ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்: எப்படி தெரியுமா?
உழைத்துக்கொண்டே இருப்பவர்க்கு வயசு பொருட்டல்ல; மனசிருந்தா போதுமே. அதாவது விஷயத்துக்குள்ள போவோமே..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171-வது படமாக உருவாகி வருகிறது ‘கூலி’ திரைப்படம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் பல ஆண்டுகளுக்கு பிறகு, சத்யராஜ் இணைந்து நடித்து வருகிறார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், மறுபடியும், ரஜினியுடன் இணைந்தது குறித்து நடிகர் சத்யராஜ் கூறுகையில், ‘சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் அதிகமாக அரட்டை அடிச்சேன். என்ன வொர்க்அவுட் பண்றோம்னு ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக்கிட்டோம். குடும்பத்தில் உள்ளவங்களை பற்றியும் நலம் விசாரிச்சோம். பழைய நினைவுகளை மனம் விட்டு பேசினோம்’ என்றார்.
இதையடுத்து, தனக்கு என்ன வயசு என ரஜினிகாந்த் கேட்டதாகவும், அதற்கு 70 வயது ஆகிறது என தான் கூற, அதைக்கேட்ட ரஜினிகாந்த் ஷாக்கானதாகவும் சத்யராஜ் கூறியுள்ளார்.
தற்போது எடுக்கப்படும் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.
மேலும், பாலிவுட் மெகா ஸ்டார் அமீர்கானும் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக மே மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சத்யராஜ் அடுத்ததாக கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளது.
பொதுவாக, வயசுங்கிறது உடம்புக்கு தானே தவிர, மனசுக்கு கிடையாது என்பதை சத்யராஜ் சாரும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.