விடாமுயற்சியா? குட் பேட் அக்லியா?: பொங்கலுக்கு ரிலீஸாகும் படம் எது? விவரம்..
அஜித் ரசிகர்களுக்கு ‘தல’ பொங்கல் வருவது கிட்டத்தட்ட உறுதியாக விட்டது. இனி, அமர்க்களம் தான், எப்படியென்றால்..
‘தல’ அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், திரையுலகத்திற்கும் இருக்கும் ஒரு கேள்வி, அஜித் நடிப்பில் எந்த படம் முதலில் ரிலீசாகும் என்பதே.
‘விடாமுயற்சி’ திரைப்படத்தை முதலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என படக்குழு நினைத்தது. ஆனால், அது முடியவில்லை. எனவே, டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்ட நிலையில், தற்போது அதற்கும் சாத்தியமில்லை.
இதைத்தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடாமுயற்சி திரைப்படத்தை வெளியிடலாம் என லைக்கா நிறுவனம் நினைத்துள்ளது. ஆனால், அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.
எனவே, குட் பேட் அக்லி திரைப்படம் வழி விட்டால் தான், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும். இல்லையென்றால், மேலும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும். நிலைமை இப்படி இருக்கையில் அஜித் என்ன முடிவெடுத்துள்ளார் என தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஒரு மாதத்திற்குள்
முடித்துவிட திட்டமிட்டுள்ளார். அதை முடித்த பிறகு தான், அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும் என அஜித் கூறியிருக்கின்றார். ஏனென்றால், அஜித் தற்போது குட் பேட் அக்லி பட கெட்டப்பில் இருக்கின்றார்.
அதனால், விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதை வைத்து பார்க்கையில், கண்டிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தான் வெளியாகும் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஆனால், கடைசி நேரத்தில் ரிலீஸில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.