காதலனை விட்டு பிரிந்ததற்கு காரணம் என்ன?: நடிகை சானியா ஐயப்பன் விளக்கம்
’22 வயதாகும் சானியாவின் காதல் முறிவுக்கு என்ன காரணம்’ என்ற தகவல் காண்போம்..
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவர்ந்தவர் நடிகை சானியா ஐயப்பன்.
மலையாள படங்களை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இறுகப்பற்று, ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்க்கவாசல் திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது சர்ச்சைகளில் சிக்கிய ‘எம்புரான்’ படத்திலும் சானியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
22 வயதாகும் சானியா தன்னுடைய காதலானது தோல்வியில் முடிந்ததாக கூறியுள்ளார். இதற்கான காரணத்தை தெரிவிக்கையில், ‘நான் காதலித்த நபர் எப்போதும் என்னிடம் சினிமாவில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய மாட்டார்கள். நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமா துறையில் இருக்க மாட்டார்கள்’ என அடிக்கடி கூறி வந்தார்.
நாம் யாரை அதிகமாக நேசிக்கிறோமோ, அவர்களுடைய வாயில் இருந்து, இப்படிப்பட்ட வார்த்தையை கேட்பது அதுவும் என்னுடைய தொழிலை இழிவாகப் பேசுவது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவரிடம் இருந்து விலகினேன்’ என தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இதை ஏற்றுக்கொள்ள என் மனம் வலித்தாலும், இப்போது நார்மல் ஆகிவிட்டேன் என சானியா கூறியுள்ளதற்கு, இணையவெளி ஆர்வலர்கள், ‘குழந்தையாக இருக்கும்போதே சினிமாவுக்குள் வந்த சானியாவே, இன்னும் அனுபவம் நிறைய நிகழும். மேலும் கடந்து பழகுக’ என தெரிவித்துள்ளனர்.