தனுஷின் ‘குபேரா’ ரிலீசுக்கு பிறகு ‘இட்லி கடை’ ரிலீஸ்

‘நிலவுக்கு..’ படம் தோல்வியடைந்த நிலையில், ‘இட்லி கடை’ படத்தை வெற்றியாக்கும் முனைப்பில் இருக்கிறார் தனுஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்..
பன்முகத் திறமை பெற்ற நடிகர் தனுஷ், தனது அக்கா மகன் பவிஷை வைத்து இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. அதே நாளில் ரிலீஸான ‘டிராகன்’ செம ஹிட்டாகி ரஜினியின் பாராட்டும் பெற்றது.
இதற்கிடையே அவர் ‘இட்லி கடை’ திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இவருக்கு நித்யா மேனன் ஜோடியாக இணைந்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக, ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில், வில்லனாக அருண் விஜய் புதிய பரிமாணத்துடன் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஏப்ரல் மாதம், 10-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு, படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தனர். இதற்கு ‘குட் பேட் அக்லி’ ரிலீஸாக இருப்பது எனவும், இல்லையில்லை ‘இட்லி கடை’ ஷுட்டிங் இன்னும் முடியவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இட்லி கடை படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் ஜூன் மாதம் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.