ராஜமவுலி-மகேஷ்பாபு படத்தின் ஷுட்டிங் அப்டேட்

ராஜமவுலி தற்போது இயக்கும் படத்தின் அப்டேட் பார்ப்போம்..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படங்களை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பிரம்மாண்ட படம் தயாராகி வருகிறது.

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமின்றி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தினை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி.

ஏனெனில், பலரும் இரண்டு பாகங்களாக உருவாக்கி வருவதால், அதில் நாமும் இணைய வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். முன்னதாக ‘பாகுபலி’ படத்தின் மூலம் இரண்டு பாகங்கள் என்ற ட்ரெண்ட்டை உருவாக்கியதே ராஜமவுலி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ தயாராகி வருகிறது.

குறிப்பாக, இதனை ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிட ராஜமவுலி முடிவு செய்திருக்கிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் மகேஷ் பாபு உடன் நடித்து வருகிறார்கள். விரைவில் இதன் படப்பிடிப்புக்காக வெளிநாட்டு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.

2026-ம் ஆண்டில் தான் இதன் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இப்படத்தின் கதைக்களமாக ‘காடு’ இருப்பதால், பெரும்பாலான காட்சிகள் காட்டுக்குள்ளேயே ஷுட்டிங் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது தெலுங்கானாவில் 400 ஏக்கர் காட்டை அழித்து, தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க இருப்பதாக கூறப்படும் தகவலும், இப்படத்தில் சேர்க்கப்படுமோ எனவும் திரை ஆர்வலர்களால் பதிவிடப்படுகிறது.

director rajamouli has new plan for mahesh babu