பழைய நினைவுகளை அழித்து, புதிய வாழ்க்கையில் நுழைகிறார் சமந்தா
‘பழையன கழிதலும், புதியன புகுதலும் நன்று’ என்பதுபோல நடிகை சமந்தா 2-வது மணவிழா புகுகிறாரா? என காண்போம்..
நாக சைதன்யா-சம்ந்தா இருவரும் காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர், இருவரும் 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில், அவர் தனது காதல் சின்னமாக YMC டாட்டூவை வைத்திருந்தார்.
ஆனால், தற்போது டாட்டூவை நீக்கியதன் மூலம் அவர் பழைய நினைவுகளை மறந்துவிட்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்கிறார் என்பது போல் ரசிகர்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, சமந்தா தனது நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் திருமண ஆடையை முழுவதுமாக மாற்றியமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, பிரபல நகை வடிவமைப்பாளர் திருமித் மேருலியா, சமந்தா தனது 3-காரட் வைர மோதிரத்தை பதக்கமாக மாற்றியதாகக் கூறினார். அதேபோல், தனது திருமண ஆடையை கருப்பு நிற ஆடையாக மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமந்தா விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர், இயக்குனர் ராஜ் நிதிமோருவை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அதற்கேற்றாற்போல், இந்த செய்திக்கு இருவருமே எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.