வைஷ்ணங் தேஜ்-ரிது வர்மா நட்சத்திர ஜோடிக்கு, ரசிகர்கள் ‘அட்வான்ஸ்’ வாழ்த்துமழை
‘இவருக்கு இவர் இணை’ என்ற இல்லற வாழ்க்கையை தெரிவு செய்தலும் மெகா வரலாறுதான். இது சாமான்யர் முதல் சாதனையாளர் வரைக்கும் பொருந்தும் உணர்வியல். அவ்வகையில் ஓர் நிகழ்வு காண்போம்..
தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிது வர்மா.
இவர், முன்னதாக தெலுங்கில் வெளியான ‘உப்பென்னா’ படத்தில் சிரஞ்சீவியின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்த வைஷ்ணவ் தேஜ் உடன் பிறந்த நாளை கொண்டாடினார். இதனால், இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது.
ரிது வர்மாவுக்கு கடந்த மார்ச் 10-ம் தேதியுடன் 35 வயது தாண்டி விட்டது. ஆனால், வைஷ்ணவ் தேஜுக்கு இப்போது 30 வயது ஆகிறது. சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் பல பிரபலங்கள் வயது வித்தியாசத்தை பொருட்படுத்துவது இல்லை.
ஏற்கனவே நடிகை லாவண்யா திரிபாதி, நடிகர் வருண் தேஜை திருமணம் செய்து சிரஞ்சீவி குடும்பத்தில் மருமகளாக மாறியுள்ளார். இந்நிலையில், தற்போது ரிது வர்மாவும் அவ்வகையில் வருகிறார் என டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
ரிது வர்மா மற்றும் வைஷ்ணவ் தேஜ் இருவரும் தாங்கள் காதலர்கள் இல்லை வெறும் நண்பர்கள் மட்டும் தான் எனக் கூறியுள்ள நிலையிலும், இரு வீட்டை சேர்ந்த பெரியவர்கள் இவர்களுக்கு திருமணத்தை செய்து வைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, ரிது வர்மா என்ன சொல்லப் போகிறார் என்பதற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இச்சூழலில், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அட்வான்ஸ் வாழ்த்துமழை பொழிய தொடங்கி விட்டனர்.