நடிகர்-கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மறைவு; உருவச்சிலை இன்று திறப்பு
தனது இறப்பின் காலம் நெருங்குவதை தெரிந்தும், மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரையாடியவர் ஷிகான் ஹுசைனி, இன்று மறைந்தார். இது பற்றிய நெஞ்சு கனக்கும் நிகழ்வுகள்..
விஜய் நடிப்பில் ‘பத்ரி’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களில் நடித்த புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி, ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு,
இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஷிகான் ஹுசைனி, சென்னையில் கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சிக் கூடம் ஒன்றை நடத்தி வந்தார். புத்தர் மீது தீவிரமான அன்பு கொண்ட அவர், புத்தா சேம்பர் ஒன்றையும் நிர்வகித்து வந்தார். தான் இறந்த பிறகு தன் உடலை மூன்று நாட்கள் அந்த புத்தா சேம்பரில் வைத்திருக்க வேண்டும் என ஆசையை தெரிவித்திருந்தார்.
அதுபோல, ஹுசேன் தன் அம்மாவின் தலைமுடியை அந்த இடத்தில் பாதுகாத்து வந்தார். தன் கால் முட்டியை தனியாக அங்கு வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். தன் எலும்புகளை வைத்து புத்தர் சிலை செய்வதற்காக பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால், கேன்சர் பாதிப்பு வந்ததால் அவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.
ஹுசேன், கடைசி ஆசை கடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆரம்பத்தில் நான்காயிரம் வெள்ளை அணுக்கள் இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பே அதில் ஜீரோவாக மாறிவிட்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டு சிகிச்சை அளித்துக் கொண்டே இருந்தனர்.
அவருடைய மாணவர்கள் மருத்துவமனையில் அவருக்காக காத்திருந்தனர். ஆனாலும், நான் எப்போது இறந்தாலும் பரவாயில்லை என்னுடைய மாணவர்கள் எதை செய்ய வேண்டும் என்று நான் எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொடுத்து விட்டேன் என்று சொல்லியிருந்தார்.
அதுபோல, தன்னுடைய கடைசி ஆசையாக தனது உருவச்சிலையை தன் சொந்த ஊரான மதுரையில் நிறுவுவதற்காக ஏற்பாடுகளை செய்துவிட்டு இறந்து போயிருந்தார்.
இன்று, அவருடைய மாணவர்கள் அவர் ஆசைப்பட்ட மாதிரியே அவருடைய சொந்த ஊரில் அவர் உருவச் சிலையை திறந்து வைத்திருக்கிறார்கள். அந்த சிலையில் தன்னுடைய இதயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு ஹுசைன் மறைந்து இருக்கிறார்.
நடிகராகவும் பல மாணவர்களுக்கு மாஸ்டராகவும் இருந்த ஹுசைன் இறப்பு பலரையும் வருத்தம் அடைய செய்திருக்கிறது.
ஆனாலும் அவர், தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்த பிறகும் தன்னம்பிக்கையாக பேசிக் கொண்டிருந்தது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..
