பிரதமர் மோடியுடன், நடிகர் நாகார்ஜுனா தன் குடும்பத்தினருடன் சந்திப்பு: அரசியல் பிரவேஷமா?
நாகார்ஜுனா தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது பற்றி விவரம் காண்போம்..
நாக சைதன்யா-சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ படம், முன்பு வெளியான ‘லவ் ஸ்டோரி’ படத்தின் முதல் நாள் வசூலை விட குறைவாகவே வசூலாகி உள்ளது.
இருப்பினும், தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சாய் பல்லவியின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, ‘நமோ நமசிவாய’ பாடலுக்கு வியக்க வைக்கும் வகையில் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார்.
இந்நிலையில், நாக சைதன்யா தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவருக்கு நாகேஸ்வர ராவ் பற்றிய புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
சைதன்யா தனது மனைவி சோபிதா துலிபாலா, அப்பா நாகார்ஜுனா மற்றும் அம்மா அமலா ஆகியோருடன் சென்று பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படத்தை எம்பி ஷபரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, நாகார்ஜுனா குடும்பத்தினர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மேலும், நாகார்ஜுனா பாஜக.வில் இணைய வாய்ப்பிருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.