சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படம், ஓடிடி உரிமம் ரூ.80 கோடி
‘கங்குவா’ படத்தை விட ரூ.20 கோடி குறைவாக விற்பனை ஆகியுள்ளது ரெட்ரோ. இது பற்றிய விவரம் பார்ப்போம்..
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மற்றும் ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷ்ரேயா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மே1-ம்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.80 கோடிக்கு இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு முன்னதாக வந்த ‘கங்குவா’ படத்தை அமேசான் ரூ.100 கோடி கொடுத்து வாங்கியிருந்தது.
‘ரெட்ரோ’ படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. லவ் ப்ளஸ் ஆக்சன் என்ற கலவையில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ படம் சூர்யாவுக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சூர்யா ‘பேட்டைக்காரன்’ படத்திலும் நடித்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இது, சூர்யாவின் 45-வது படமாகும். திரிஷா ஜோடியாக இணைந்துள்ளார்.