Web Ads

‘விடாமுயற்சி’ கதையை அஜித் செலக்ட் செய்ய காரணம் என்ன?: மகிழ் திருமேனி விளக்கம்

‘விடாமுயற்சி’ படத்தின் ‘கதை வந்த கதை’ குறித்து இயக்குனர் மகிழ் கூறியவற்றை காண்போம்..

‘தல’ அஜித், திரிஷா இவர்களுடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுபோலவே வசூலிலும் எதிரொலிக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி கூறியதாவது; ‘அஜித் நடிகர் மட்டும் அல்லாமல், கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தெரிந்ததே. பைக்கில், பல நாடுகளுக்கு டிரிப் அடிப்பவர்.

தற்போது ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் கார் ரேஸ் நிறுவனத்தை தொடங்கி, அதில் சாதனைகளையும் படைத்து வருகிறார். அண்மையில், துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அவரது அணி, தனிப்பட்ட பிரிவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தது, இதனால், நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும், பெண்களுக்கு அதிகமான மதிப்பு கொடுத்து வருபவர் அஜித் . அதேபோல பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் படத்தில் நடிக்கவேண்டும் என்று எப்போதுமே கூறுவார். அதனாலேயே ‘விடா முயற்சி’ படத்தின் கதைக்களத்தை அவர் தேர்ந்தெடுத்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, அஜித் எப்போதுமே மனதளவில் பாதிப்பை உணர்ந்து வருபவர். அதனாலேயே ‘விடாமுயற்சி’ படத்தின் கதையை, பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது’ என்றார் மகிழ்.

1997-ம் ஆண்டில் வெளியான ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ படத்தின் தழுவலில் உருவானது ‘விடாமுயற்சி’ படத்தின் கதை. அவ்வகையில், இப்படக்கதை அஜித்தை மனதளவில் மிகவும் ‘கனெக்ட்’ ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.