நந்தினியை தேடி அலையும் சூர்யா.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 10-02-25
moondru mudichu serial today promo update 10-02-25

நேற்றைய எபிசோடில் திருவிழாவை முடித்துவிட்டு அருணாச்சலம் மாதவி அசோகன் சுந்தரவல்லி நால்வரும் ஒரு காரிலும் மறுபக்கம் சூர்யா மற்றும் நந்தினி இருவரும் ஒரு காரில் வருகின்றனர். சுரேகா கல்யாணத்தைப் பற்றி பேச இப்ப எதுக்கு அவசரம் அதெல்லாம் வேண்டாம் என அருணாச்சலம் சொல்லுகிறார். அவர்கள் ஜாலியாக பேசிக் கொண்டிருக்க, மறுபக்கம் நந்தினியும் சூர்யாவும் இந்த திருவிழாவால நம்ம வீட்ல ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகிறது சுரேகா அம்மாவுக்கு கல்யாணம் ஆகும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, இப்ப எதுக்கு அவளுக்கு கல்யாணம் இன்னும் நிறைய படிக்க வேண்டியது இருக்கு அப்புறம்தான் அதெல்லாம் என்று சொல்ல நாளைக்கு ஒரு முக்கியமான நாள் என்று சொல்லுகிறார். இன்னைக்கு என்ன சாப்டனு கேட்டாலே எனக்கு தெரியாது இதுல நீ வேற முக்கியமான நாலுனு சொல்ற நீயே சொல்லு என்று சொல்ல நாளைக்கு சுந்தரவல்லி அம்மாவுக்கு அருணாச்சலம் ஐயாவுக்கும் 30ஆவது கல்யாண நாள் என்று சொன்னால் எப்படி இவ்வளவு ஞாபகம் வச்சிருக்கே என்று கேட்கிறார். நாளைக்கு நம்ம ஏதாவது சிறப்பா பண்ணலாமா என்று சொல்ல, சிறப்பா கொண்டாடிடுவோம் என்று முடிவெடுக்கின்றனர். அந்த நேரம் பார்த்து ஜிபில் வரும் சிலர் சூர்யாவின் காரை முன்னே போக விடாமல் வம்பு இழுக்க ஒரு கட்டத்திற்கு மேல் அவரை பின்தொடர்ந்து சூர்யா காரை தடுத்து நிறுத்துகிறார்.

உடனே அவர்களிடம் இப்படித்தான் கார ஓட்டுவீங்களா என்று கோபப்பட்டு இறங்கி வரப்போக அந்த நேரம் பார்த்து சாரி சார் நீங்க போங்க என்று சொல்லுகின்றனர். நீங்க இப்படி கோபப்படுறது தான் பல நேரத்தில் பிரச்சனை உருவாக்குது என்று சொல்ல அவங்க பண்ணது மட்டும் சரியா இவங்களால இவ்வளவு பேருக்கு பிரச்சனை என்று சொல்ல சரியா அவங்கள தாண்டி வந்துட்டோம்ல விடுங்க என்று சொல்லுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் ஒரு லாரியும் அதேபோல் பண்ண ஒரு வழியாக சூர்யா அந்த லாரியையும் கடந்து வருகிறார். உடனே இளநீர் கடையை பார்த்து இளநீர் குடிக்க இறங்க நந்தினி அவரிடம் பேரம் பேச அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இரண்டு இளநீர் வெட்ட சொல்லுகின்றது. உடனே சூர்யா கவனிக்க சூர்யாவின் காருக்கு பின்னால் வந்த லாரியும் அதற்கு பின்னால் ஜீப்போம் வந்து நிற்கின்றனர். உடனே சூர்யாவுக்கு சந்தேகம் வர அவர் அங்கிருந்து நந்தினியை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார் உடனே இரண்டு வண்டியும் அவர்களை பின்தொடர்கிறது.

இதே வேகத்தில் போனீங்கன்னா வீட்டுக்கு நாளைக்கு தான் போக வேண்டும் என்று அசோகன் அருணாச்சலத்தைக் கிண்டல் அடிக்கிறார். மாதவி பசிக்குது சாப்பிட்டு போகலாம் என்று சொல்ல சரி சூர்யாவுக்கு போன் பண்ணி கேட்க அவரும் வண்டியை நிறுத்திவிட்டு நீங்க எங்களோட பத்து கிலோமீட்டர் பின்னாடி தான் வந்துட்டு இருக்கீங்க கொஞ்சம் தூரத்துல பஞ்சாபி தாபா ஹோட்டல் இருக்கு அங்க வந்துருங்க அவங்க வெயிட் பண்றோம் எல்லாம் சாப்பிடலாம் என்று சொல்லி கிளம்புகின்றன. கொஞ்ச நேரத்தில் சூர்யாவும் நந்தினியும் ஹோட்டலுக்கு வந்து விடுகின்றனர். பின்னாலேயே அதே ஹோட்டலுக்கு சூர்யாவை பாலோ பண்ணி இருப்பவர்களும் வந்து விடுகின்றன. அவர்களைப் பார்த்து சூர்யா கடுப்பாக நந்தினி அமைதியாக இருக்கச் சொல்லுகிறார். உடனே குடும்பத்தினரும் வந்துவிட சூர்யா அனைவருக்கும் ஆர்டர் கொடுக்கிறார். சூர்யா மியூசிக் வாசிப்பவர்களுடன் சென்று தமிழ்ல வாசிங்க என்று சொல்ல அவர்களும் தமிழில் வாசிக்க மூன்று பெண்கள் நடனமாடுகின்றனர். சூர்யாவும் அவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார். பிறகு சூர்யா அருணாச்சலத்திடம் நாளைக்கு என்ன நாள் டாடி என்று கேட்கிறார். அருணாச்சலம் என்ன நாள் என தெரியாமல் யோசிக்க மாதவி மற்றும் அசோகனிடம் கேட்கிறார்.

அவர்களும் தெரியாமல் இருக்க, அருணாச்சலம் என்ன நாளன்று சொல்லு என்று சொல்ல நீங்களே உங்க பொண்டாட்டி கிட்ட கேளுங்க என்று சொல்ல உனக்கு தெரியுமா சுந்தரவல்லி என்று கேட்க எனக்கு ஞாபகம் இருக்கு உங்களுக்கு தான் ஞாபகம் இல்லை என்று சொல்லுகிறார். அசோகன் அத்தைக்கு பிறந்தநாள் என்று சொல்ல அருணாச்சலம் என்ன விசேஷம் என்று சொல்லுங்க என்று சொல்ல சுந்தரவல்லி நாளைக்கு நம்மளோட கல்யாண நாள் என்று சொல்லுகிறார். அதுவும் முப்பதாவது கல்யாண நாள் என்று சூர்யா சொல்லுகிறார். செம கிராண்டா சூப்பரா செலிப்ரேட் பண்ணனும் நானும் நந்தினியும் எல்லா ஏற்பாடும் செய்கிறோம் என்று சொல்ல எதுக்கு இதெல்லாம் யாரைக் கேட்டு இதெல்லாம் பண்றீங்க கல்யாண நாளும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சுந்தரவல்லி சொல்லி விடுகிறார். உடனே அருணாச்சலம் வழக்கமா நீதான இதெல்லாம் கொண்டாடணும்னு சொல்லுவ இப்ப எதுக்கு இப்படி சொல்ற என்று சொல்ல இந்த வருஷம் மூடு இல்லை என்று சொல்லுகிறார்.

யாருக்கு பிடிக்குதோ இல்லையோ என் பொண்டாட்டி இல்லாம இந்த விழாவை கொண்டாட முடியாது கண்டிப்பா செஞ்சு தான் தீர்வேன் என்று சொல்ல இது ஒன்னும் அவரோட பிறந்தநாள் கிடையாது இது என்னோட கல்யாண நாள் என்னோட விருப்பம் இல்லனா நடக்கக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் சாப்பாடு வந்துவிடுகிறது. குடும்பத்தினர் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்க, சூர்யா சாப்பிட்டுக்கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நந்தினி சாப்பிட்டு முடிக்க நீ போய் கை கழுவிட்டு வா என்று சொல்லி அனுப்ப, இதை கவனித்த அந்த நபர் உடனே நந்தினியின் பின்னால் சென்று பக்கத்தில் நின்று கை கழுவ நந்தினி முறைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவை பாலோ பண்ணி வந்த நபர்கள் நந்தினியை கடத்திவிட, சூர்யா நந்தினி தேடி அலைகிறார். ஒரு இடத்தில் வந்து கட்டி போட்டு வைத்திருக்க சூர்யா அவரை கண்டுபிடிக்கிறாரா? இல்லையா? என்று எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 10-02-25
moondru mudichu serial today promo update 10-02-25