Web Ads

கோபப்பட்ட சுந்தரவல்லி,மன்னிப்பு கேட்ட நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலில் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today episode update 20-02-25
moondru mudichu serial today episode update 20-02-25

நேற்றைய எபிசோடில் சூர்யா தூங்கி எழுந்திருத்து இவ்வளவு டயர்டா இருக்கே என்று யோசித்து சரக்கு பாட்டில்கள் பக்கத்தில் நின்று உங்களால தான் எனக்கு இந்த நிலைமை எனக்கு இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் பண்றீங்க என்று சொல்லி பேசி விட்டு ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்து உங்கள வெச்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்ல மறுப்பக்கம் நந்தினி சூர்யாவிற்காக மாத்திரையும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

சூர்யா பாத்ரூமில் இருந்து வந்தவுடன் ஒரு அட்டைப்பெட்டி இருக்க அதில் ஓபன் செய்து பார்க்கிறார். அதில் பழைய சரக்குகள் இருக்க ஓல்ட் இஸ் கோல்ட் ஃப்ரண்ட் என்று அதை தூக்க முடியாமல் காலில் தள்ளிக் கொண்டு வந்து உட்கார்ந்திட்டு பாட்டிலில் இருக்கும் கொஞ்சம் கொஞ்ச சரக்குகளை ஒரு டம்ளரில் எடுத்து ஊத்துகிறார். நந்தினியும் சாப்பாடு எடுத்துக்கொண்டு மேலே வர சூர்யா கொஞ்சமாவது போதை ஏத்துங்க பார்த்து பண்ணுங்க என சரக்கிடம் பேசிவிட்டு குடிக்க போக நந்தினி என்ன சார் என்ன பண்ண போறீங்க என்று சொல்லிவிட்டு சரக்கை வைக்க சொல்லுகிறார். ஏன் வைக்கணும் என்று சொல்ல தட்டில் சைட் டிஷ் இருக்கா குடு என்று கேட்க,நந்தினி சூர்யா கையில் இருந்து வலு கட்டாயமாக புடுங்கி வைக்கிறார். வீட்லதான் சரக்கு பாட்டில் இல்லையே இது எங்க இருந்து எடுத்தீங்க என்று சொல்ல இருந்த பழைய சரக்கு எல்லாம் எடுத்து மிக்ஸ் பண்ணி வெச்சிருக்கேன் என்று சொல்ல அதற்கு நந்தினி உங்க உடம்பு இருக்கிற நிலைமைக்கு இப்ப நீங்க குடிக்கக்கூடாது என்று சொல்லுகிறார். நீங்க குடிச்சிட்டு நொற தள்ளி கீழே விழுந்தா போய் எல்லாரும் துடிச்சி போய்ட்டாங்க. டாக்டர் நீங்க பொழைக்கிறதே கஷ்டம்னு சொன்னாங்க அது இருக்கும்போது நீங்க திரும்பவும் குடிக்க கூடாது என்று சொல்லிவிட்டு டிபன் சாப்பிட சொல்லுகிறார். நான் சாப்பிட்டு குடிப்பேன் என்று சொல்ல ஆனால் நந்தினி நீங்க குடிக்கக்கூடாது என்று சொல்லுகிறார்.

ஏற்கனவே என்னால் தான் எல்லா பிரச்சினையும் சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல, உன்னை எதுக்கு சொல்றாங்க அதுக்கு நீ என்ன பண்ணுவ எனக்கு ஃபுட் பாய்சன் தானே சொன்னாங்க நீ ஏதாவது பண்ணியா எனக்கு ஆனதுக்கு நீ தான் காரணமா என்று கேட்க நந்தினி அதெல்லாம் ஒன்னு இல்ல சார் உங்களை சரியா பாத்துக்கலன்னு சொன்னாங்க உங்களுக்கு சரியா சாப்பாடு கொடுக்கலன்னு சொன்னாங்க என்று சொல்ல அவங்க பேசுறதெல்லாம் நீ எதுவும் கண்டுக்காத நந்தினி என்று சொல்லிக் கொண்டிருக்க, சூர்யாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு கிளாஸில் இருந்த சரக்கை பாத்ரூமில் ஊற்றி விட சூர்யா என் நந்தினி இப்படி பண்ண என்று சொல்ல, நந்தினி இப்போ உங்களுக்கு இருக்கிற நிலைமையில நீங்க குடிக்கக்கூடாது அது உங்க உயிருக்கு ஆபத்து ஆயிடும் சாப்டுட்டு மாத்திரை போடுங்க என்று சொல்லி சாப்பாடு கொடுக்கிறார்.

மாதவி சுரேகா மற்றும் அசோகனிடம் அவ குழந்தை பெத்துகருத்துக்காக மருந்து கொடுக்கல, சூர்யாவோட குடியை நிறுத்த தான் பண்ணி இருக்கா ஆனா அதுவும் நமக்கு ஆபத்துதான் சூர்யா திருந்திட்டானா நம்ம சோற்றுக்கு சிங்கிரி அடிக்க வேண்டியதுதான் என்று சொல்ல அசோகன் புலம்ப ஆரம்பிக்க, அதெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா என்று மாதவி சொல்ல முதலில் சூர்யாவிற்கு எப்படி இப்படி ஆச்சுன்னு முதல்ல தெரிஞ்சுக்கணும் இத்தனை நாளா குடிக்கிறான் இவ்வளவு நாள் ஆகாது இப்ப ஏன் ஆச்சு என்று யோசிக்கிறார். இப்போ பிரச்சனை சூர்யா இல்ல நந்தினி தான், அவ இல்லனா சூர்யா அவன் பாட்டுக்கு குடிச்சுக்கிட்டு இருப்பா என்று சொல்லி கொண்டே இருக்க ரேணுகா எடுத்துக்கொண்டு வந்து மூவருக்கும் ஜூஸ் கொடுக்கிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அப்பா ஓவரா சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல மாதவி அவர் ஏன் நம்ம கிட்ட பொய் சொல்லணும் என்று யோசித்து விட்டு பிறகு சூர்யாவை திருத்த நந்தினியால் மட்டும்தான் முடியும்னு அப்பா நினைக்கிறாரா என்று பேசிக்கொண்டிருக்க ரேணுகா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என ஆரம்பித்து தயங்க மாதவி சொல்ல சொல்லுகிறார். நந்தினியும் அருணாச்சலம் அய்யாவும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டேன் சூர்யா சாருக்கு இப்படி ஆனதுக்கு நீங்கதான் காரணம்னு சொல்றாங்க நீங்கதான் எதையோ கலந்து கொடுத்து இருப்பீங்கன்னு சொல்றாங்க என்று சொல்ல மாதவி கோபப்பட சுரேகா இதை ஏதாவது பண்ணனும் என்று சொல்ல, இதுக்கு மேல இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன் என் மேல கொலை பழி போட்டு இருக்காங்க என்று கோபப்படுகிறார்.

மாதவி நான் கிளம்புறேன் என்று கோபப்பட்டு கிளம்ப ரேணுகா அர்ச்சனமா சொன்ன மாதிரி சொல்லியாச்சு இனிமே வீடு கொழுந்து விட்டு எரியும் என நினைத்துக் கொண்டு சென்றுவிட, மறுபக்கம் சுந்தரவல்லி அருணாச்சலமும் பேசிக்கொண்டிருக்கின்றனர். சூர்யாவோட இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று சுந்தரவல்லி கேட்க யார் காரணம் என்று எனக்கு தெரியாது ஆனால் அதுக்கு நந்தினி காரணம் கிடையாது என்று சொல்லுகிறார்.

எனக்கு ஒரு விஷயம் புரியல அவள் யாருங்க உங்களுக்கு அவளுக்கு எதுக்கு இப்படி சப்போர்ட் பண்ணி தலையில் தூக்கி வைத்து ஆடிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். மாதவி துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் சூர்யா மருந்து கொடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவதான் இவ்வளவு பண்ணியும் நீங்க சப்போர்ட் பண்றீங்கன்னா அவ உங்க ஊர்க்காரி அப்படியா என்று கேட்க பரபரப்பாக மாதவி துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்க அவளுக்கு ஓவரா சப்போர்ட் பண்ணா அவ தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருப்பா என்று கேட்க அவ இதுவரைக்கும் என்ன தப்பு பண்ணி இருக்கா சொல்லு என்று சொல்ல, அவ இந்த வீட்டுக்கு வந்ததே தப்பு தான் என்று சொல்லுகிறார். மாதவியும் அசோகனும் வீட்டை விட்டு வெளியே போக சுந்தரவல்லி அவர்கள் பின்னால் ஓடி வந்து கூப்பிட்டு நிறுத்துகிறார் உடனே நந்தினியும் வர இதுவரைக்கும் நம்ம வீட்டுல இது மாதிரி பிரச்சனை வந்திருக்கா பாருங்க என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி வீட்டை விட்டு கிளம்ப நந்தினி இப்ப நடந்ததுக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என்று சொல்லி அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார்.

சூர்யா படுத்த படுக்கையா இருக்கான் இவ வீட்டை விட்டு போறேன்னு சொல்றா எல்லாத்துக்கும் காரணம் இவ தான் இப்ப கூட இவளுக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசுவீங்களா என்று சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் கேட்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி அருணாச்சலம் பேசிக் கொண்டிருக்க சூர்யா நடந்து வரும் போது தட்டும் தடுமாறி கீழே விழ இவர்கள் இருவரும் தூக்கப் போக அவர் நந்தினி கூப்பிடுகிறார் இதனால் சுந்தர வள்ளி டென்ஷன் ஆகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

moondru mudichu serial today episode update 20-02-25
moondru mudichu serial today episode update 20-02-25