வெற்றிமாறன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கூலி, ஜெயிலர்-2 படங்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை இயக்குபவர் யார்? என்ற தகவல் காண்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடிந்த பின், 3 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளார். அந்நேரத்தில் தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதவும் திட்டமிட்டுள்ளார்
பின்னர், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர்-2 ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.
இரண்டு படங்களை முடித்த பின்னர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவரின் 173-வது படத்தை யார் இயக்கப் போகிறார்? என்கிற கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது.
இயக்குனர்கள் மணிரத்னம், மாரி செல்வராஜ் ஆகியோர் பேசப்பட்டு வந்த நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது இயக்குனர் வெற்றிமாறனுக்கு சென்றிருக்கிறது. திடீரென வெற்றிமாறனிடம் கதை கேட்க ரஜினி அழைப்பு விடுத்ததாகவும், தனக்கு ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்யுமாறும் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ பட பணிகளில் உள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ‘கூலி’ பட ரிலீஸிற்கு பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.