பார்த்திபன்-எஸ்.ஜே.சூர்யா-வடிவேலு நடிக்கும் காமெடி படம் ரெடி: தயாரிப்பாளர் யார்?
‘தயாரிப்பாளர் ரெடியானால், பக்கா காமெடி அட்டகாசம் பார்க்கலாம்’ என்கிறார் பார்த்திபன். இது பற்றிய தகவல் இப்ப பார்க்கலாம்..
சுந்தர். சி இயக்கத்தில் ‘கேங்கர்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. மேலும், பிரசாந்த்துடன் இணைந்து ‘வின்னர்-2’ படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பார்த்திபன் மற்றும் வடிவேலு ஆகியோர் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார். விரைவில், இருவரும் இணைந்து நடிக்கும் படம் வரப்போவதாக அறிவித்துள்ளார்.
பார்த்திபன் கடந்த சில ஆண்டுகளாகவே ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் மற்றும் டீன்ஸ் என வித்தியாசமான படங்களை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் பழைய பார்த்திபனாக காமெடி படம் ஒன்றைக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
வெற்றிக்கான தேர்தல் கூட்டணி எதுன்னு தெரியாது,ஆனா……! pic.twitter.com/98g9zWdtlC
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 19, 2025
‘வெற்றிக்கான தேர்தல் கூட்டணி எதுன்னு தெரியாது, ஆனா……!’ என்ற அடுத்த வார்த்தையை எழுதாமல், தற்போது வடிவேலுவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
மீண்டும் வடிவேலு மற்றும் பார்த்திபன் இணைந்து படத்தில் நடித்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பார்த்திபன் மற்றும் வடிவேலு என இருவருக்குமே கமர்ஷியல் கம்பேக் தேவைப்படும் நிலையில், சரியான கூட்டணிதான் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ‘தயாரிப்பாளர் தான் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், கிடைத்தால் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட வேண்டியது தான்’ என பார்த்திபன் அடுத்த கொக்கியையும் அழகாக போட்டுள்ளார். எஸ்.ஜே. சூர்யாவுடனும் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ரசிகர்களின் கேள்விக்கு கமெண்ட் பக்கத்தில் பார்த்திபன் பதிலளித்துள்ளார்.
ஆக, பார்த்திபன்-எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் வடிவேலு மிக்ஸ் ஆகும் வகையில் ஸ்கிரிப்ட் ரெடின்னா, டேட்ஸ்ஸும் ரெடி. அப்புறமென்ன தயாரிப்பாளரும் ரெடிதானே. யாரவரோ.?