லோகேஷ் இயக்க, சூர்யா நடிக்கும் ‘ரோலக்ஸ்’ திரைப்படம்
5 நிமிடம் வந்து ஆர்ப்பரித்த ‘ரோலக்ஸ்’ கேரக்டர், முழு நீள படமாக உருவாகவிருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்..
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ ஷூட் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை சூர்யாவே தன்னுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார்
வருகிற மே மாதம் 1-ந் தேதி, இப்படம் திரைக்கு வருகிறது.
இதனையடுத்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘பேட்டைக்காரன்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார்.
சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
மேலும், மலையாளத்தில் ‘மின்னல் முரளி’ பட இயக்குனருடன் ஒரு படம், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படம், மற்றும் ‘தண்டேல்’ பட இயக்குனர் சந்துவுடன் ஒரு படம் என சூர்யா செம கமிட்மெண்டில் இருக்கிறார்.
இந்நிலையில் சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள ‘ரோலெக்ஸ் என்கிற எல்சியூ’ திரைப்படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ ஆகிய படங்களை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் ‘ரோலெக்ஸ்’ திரைப்படத்தை தயாரிக்கிறது.
விக்ரம் படத்தில் சூர்யா வந்த ‘ரோலக்ஸ்’ எனும் 5 நிமிட கதாபாத்திரத்திற்கே ரசிகர்கள் ஆர்ப்பரித்த நிலையில், தற்போது அந்த கேரக்டரை வைத்து ஒரு முழு நீள படத்தை லோகேஷ் எடுக்க உள்ளதால், இப்படம் செம ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

