Web Ads

100% உதவித்தொகையுடன் வெற்றிமாறன் சினிமா கல்லூரியில் மாணவர் சேர்க்கை: முழு விவரம்

சினிமா கற்க விரும்பும் ஆர்வலர்கள் அதிகரித்து வரும் நிலையில், இதோ ஓர் தகவல்..

சினிமா பற்றி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றிமாறன் சினிமா கல்லூரியானது அதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

இயக்குனர் வெற்றிமாறன், தான் இயக்கிய எல்லா படங்களையும் ஹிட் கொடுத்து சாதனை படைத்துள்ளார். அதில், பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி, ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை 1 மற்றும் விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தனுஷை வைத்து மட்டும் 4 படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சினிமா பற்றி படிக்க விரும்புவர்களுக்கு வெற்றிமாறன் சினிமா கல்லூயில் B.Sc திரைப்படப் படிப்புக்கான சேர்க்கை தொடங்கியது. அதுமட்டுமின்றி 100% உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சென்னையில் இயங்கி வரும் வெற்றிமாறனின் சர்வதேச திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனத்தில் 3 ஆண்டு இளங்கலை திரைப்பட படிப்புக்கான 2025-ம் ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது

வெற்றிமாறனின் கல்லூரியில் இளங்கலை திரைக்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் https://iifcinstitute.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். மேலும் தகவல்களுக்கு 9363285306 என்ற தொலைபேசி எண்ணிற்கும் iifcinstituteofficial@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரிலும் தொடர்பு கொள்ளலாம்.