சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம்: ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்..

Web Ads

அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படங்கள் களம் இறங்குகின்றன.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் எஸ்கே உடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். ரவிமோகன் வில்லனாக வருகிறார்.

Web Ad 2

இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து, இறுதியாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து உள்ளது. தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்பேட் கொடுத்துள்ளார். அதாவது, பராசக்தி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரம் (சில நாட்களில்) வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

gv prakash update on the first single of the film parasakthi
gv prakash update on the first single of the film parasakthi