கொளுத்துறோம் மாமே..குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!
குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.

gv prakash update for good bad ugly movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பிலும் மகிழ் திருமேனி இயக்கத்திலும் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் நிலையில் அவர்களுடன் இணைந்து சுனில், பிரசன்னா அர்ஜுன்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் அவ்வப்போது அப்டேட்டும் கொடுத்து வருகிறார். ஏற்கனவே டீசர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார்.
அதாவது ஓ ஜி சம்பவம் குட் பேட் அக்லி.ட்ராக் ஒன் நேம் தயாராகி கொண்டு இருக்கிறது.#OGSambavam கொளுத்துறோம் மாமே என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
OG Sambavam —- GBU track 1 name …Cookinggggggggg #OGSambavam #GBU koluthurom maaamey 🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) March 9, 2025