Web Ads

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட நடிகை சுஜாதா..!

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை சுஜாதா.

siragadikka asai serial sujatha latest speech

siragadikka asai serial sujatha latest speech

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனாவிற்கு சிந்தாமணி ஒரு பெரிய ஆர்டரை கொடுத்து ஒட்டுமொத்தமாக தொழிலில் இருந்து மீனாவை விரட்ட முடிவெடுத்து சதி திட்டம் தீட்டியுள்ளார்.

அந்த சதியை உடைத்து மீனா எப்படி வெளியே வரப் போகிறார் என்று பரபரப்பான கதைகளத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மீனாவிற்கு வில்லியாக சிந்தாமணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜாதா சீரியல் குறித்து பேசி உள்ளார்.

அதாவது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வந்த குறைந்த நாட்களிலேயே எல்லோருக்கும் பரிச்சயம் ஆகிவிட்டேன் குறைந்த எபிசோடுகளில் நடித்தாலும் மக்கள் என்னை அடையாளம் காண்கின்றனர். இது மட்டுமில்லாமல் மீனாவை ஏன் பாடாய்படுத்துகிறாய் என்றும் என்னிடம் கேட்கின்றனர்.

மேலும் எனக்குத் தெரிந்த ஒருவர் இறந்து விட்டதால் அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த போனபோது அங்கே இருந்த ஒரு சின்னப் பையன் என்னிடம் வந்து, பாருங்க சிந்தாமணி நீங்க மீனாவ ரொம்ப சீண்டி பாக்குறீங்க இது சரியில்லன்னு சொல்லிட்டு போனான். நான் அப்படியே ஷாக் ஆகி விட்டேன். ஒரு சின்னப் பையன் கூட என்னை ஞாபகம் வைத்து கேள்வி கேட்பது எனக்கு சிரிப்பு வருகிறது அந்த அளவிற்கு சிறகடிக்க ஆசை சீரியல் ரீச் ஆகி இருப்பது மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

siragadikka asai serial sujatha latest speech

siragadikka asai serial sujatha latest speech