குட் பேட் அக்லி : பிரீமியர் ஷோ எப்போது தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்..!
குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பாக போகும் நேரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக த்ரிஷாவும் அவருடன் இணைந்து சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்ற தகவலும் வெளிவந்து இருந்தது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் பிரீமியர் ஷோ குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஏப்ரல் பத்தாம் தேதி வெளிவர உள்ள இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி 10:30 மணிக்கு ப்ரீமியர் ஷோ துவங்கும் என தகவல் சொல்லப்படுகிறது .இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
