ரஜினியின் ‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் ரோல் மீண்டும் வருமா?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ பட வில்லனை மறக்க முடியாது. மலையாள நடிகரான விநாயகன் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் விஷாலின் ‘திமிரு’ மற்றும் காளை, சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், அவருக்கு ஜெயிலர் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஜெயிலர் படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால், முதல் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் இறப்பது போல கதை அமைந்திருக்கும்.
இந்நிலையில், ஜெயிலர்-2 படம் உருவாகிறது என்றவுடன் இப்படத்திலும் வில்லன் ரோல் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறினார்கள். முதல் பாகத்தில் விநாயகன் எப்படி கலக்கினாரோ அதுபோல, ஒரு நடிகர் ஜெயிலர் 2 படத்திலும் வில்லனாக நடித்தால் படத்திற்கு பலமாக இருக்கும் என்றனர் ரசிகர்கள்.
வில்லன்களிலேயே மிகவும் வித்யாசமான வில்லனாக இருந்தார் விநாயகன். அதற்கு நெல்சன் எழுதிய வர்மன் என்ற கதாபாத்திரமும் ஒரு காரணம் என்றாலும், அந்த வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து அதற்கு உயிரூட்டியிருந்தார் விநாயகன்.
முதல் பாகத்தில் வர்மன் கதாபாத்திரம் இறந்துபோனாலும், நெல்சன் எதாவது செய்து ஜெயிலர் 2 படத்தில் விநாயகனை சில காட்சிகள் சாமீயோவில் சில காட்சிகளில் வரும்படி செய்தால் நன்றாக இருக்கும் என ஆவலாய் ரசிகர்கள் இணையவெளியில் தெரிவித்து வருகிறார்கள். இதனை இயக்குனர் நெல்சன் கவனத்தில் கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.