Pushpa 2

மகளுக்கு இயக்குனர் ஷங்கர் போட்ட கண்டிஷன்..உண்மையை உடைத்த அதிதி ஷங்கர்..!

அப்பாவின் கண்டிஷன் குறித்து பேசியுள்ளார் அதிதி ஷங்கர்.

Director Shankar put the condition for the daughter

Director Shankar put the condition for the daughter

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு பிரம்மாண்டம் பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இவரது மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் மற்றும் சமீபத்தில் வெளியான நேசிப்பாயா போன்ற படங்களில் நடித்துள்ளார் மருத்துவப் படிப்பை முடித்துள்ள இவர் சினிமாவில் நடிக்க ஆர்வம் அதிகமாக இருந்ததால் அவனது தந்தையிடம் இது குறித்து பேசி உள்ளார்.

ஆனால் அவரது தந்தையான இயக்குனர் சங்கர் இதற்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். சினிமாவில் நடிக்க முயற்சிப்பேன் என்று சொல்லியவுடன் நீண்ட நேரம் யோசித்து விட்டு ஒரு கண்டிஷன் உடன் அனுமதி வழங்கினார் அது என்னவென்றால் நான் வெற்றி பெறவில்லை என்றால் மருத்துவத்திற்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Director Shankar put the condition for the daughter

Director Shankar put the condition for the daughter