Pushpa 2

தனது வருங்கால காதல் கணவரை தமன்னா பிரிந்து விட்டாரா?

தமன்னா-விஜய் வர்மா இருவரும் இன்றும் காதலர்களாய் தொடர்கிறார்களா? என காண்போம்..

நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நடிகை தமன்னா, இதுவரை திருமணம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. விஜய் வர்மா பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள் மற்றும், வலைத் தொடர்களில் பிஸியாகி வருகிறார்.

தமன்னாவை இவர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற அந்தாலஜி படத்தில் நடிக்கும்போது காதலிக்கத் தொடங்கி நெருக்கம் ஆகினர்.

ஒருமுறை தமன்னாவிடம் ரொமாண்டிக் காட்சிகளில் நடிக்காத நீங்கள், திடீரென்று இதுபோன்ற படங்களில் மிக நெருக்கமாக நடித்திருக்கிறீர்களே என கேட்டதற்கு, ‘விஜய் வர்மா என் வருங்கால கணவர், அதனால்தான் அப்படிப்பட்ட காட்சியில் நடித்தேன்’ என்றார்.

இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், விஜய் வர்மாவை தமன்னா பிரிந்துவிட்டார் என்ற செய்தி வைரலாகி வருகிறது. இது குறித்து தமன்னா தனது இன்ஸ்டா பதிவில்,

‘காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, எதிரில் உள்ளவர்களுக்கு ரகசிய ஆர்வத்தைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவர் உங்களை அழகாகப் பார்க்க வேண்டுமென்றால், முதலில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அழகாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

இதனைக் கண்டு அவரது ரசிகர்கள், தமன்னா இப்படி ஒரு பதிவை போட காரணம் என்ன? என்றும் அவரின் காதலில் ஏதேனும் பிரச்சினையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

காதலர் விஜய் வர்மாவை தமன்னா பிரிந்து விட்டாரா? என யூகத்தின் அடிப்படையில் பல வதந்திகள் பரவி வருகிறது. இதற்கு சில நெட்டிசன்ஸ், ‘இது காதலைப் பற்றி மற்றவர்களின் பார்வைகளுக்கும் சேர்ந்த பொதுவான மெசேஜ் தான், தமன்னா ரொம்ப விவரம், டோன்ட் வொரி’ என தெளிவுரை வழங்கியுள்ளனர்.

ஆம், இது தொடர்பான ஐயங்களுக்கு தமன்னா விரைவில் இன்னொரு ஹாட் போஸ்ட் பதிவு செய்துவிட்டு, அவரது வேலையில் பிஸியாகி விடுவார், வெயிட்டிங்..

tamannaah and vijay varma breakup rumors spark goes