
விஜய் வாழ்த்து சொல்லலையா? அஜித் குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஓபன் டாக்..!
அஜித் மேனேஜர் விஜய் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க அஜித் ரேசில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ரேஸ் மட்டும் இல்லாமல் உடனே அஜித்குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அதற்கும் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் தளபதி விஜய் மட்டும் ஏன் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுரேஷ் சந்திரா பேசியுள்ளார்.
அது அஜித் சார் கார் ரேஸில் வெற்றி பெற்றதும் விஜய் சாரிடமிருந்து தான் முதல் வாழ்த்து வந்தது இது மட்டும் இல்லாமல் அஜித் சாருக்கு விருது அறிவிக்கப்பட்ட போதும் விஜய் சாரிடம் இருந்து வாழ்த்து வந்திருந்தது இவர்களுக்குள் ஆர்மார்த்தமான நட்பு இருக்கிறது. விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்ற தகவல் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் இதுவரை பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தகவல் இருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
