அஜித்துடன் மகிழ் திருமேனி மீண்டும் இணைகிறாரா?
‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்,துடன் இணைகிறாரா இயக்குனர் மகிழ் என்பது பற்றிப் பார்ப்போம்..
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதனை பார்க்க அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது மகிழ் திருமேனி தெரிவிக்கையில்,
‘தடையற தாக்க’ படத்தினை திரையரங்கில் பார்த்தவர்கள் போக, இணையத்தில் பார்த்தவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்படம் வெளியான ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்திருக்கும் என்று ஒருவர் சொன்னார்.
ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பதை தீர்மானிப்பது ரசிகர்கள் தான். ஒரு படம் நல்ல படமா, இல்லையா என்று தீர்மானிப்பது காலத்தின் கையில் இருக்கிறது. காலத்தை வென்ற படமாக தடையற தாக்க இருக்கிறது.
அஜித் சாருடன் மீண்டும் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தால் மறுக்க முடியுமா. அப்படியொரு வாய்ப்பு வந்தால் வேண்டாம் என்று சொல்லக் கூடிய ஒரு இயக்குனர் இருப்பாரா’ என்றார்.
