Web Ads

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம்..

தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்து கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இதனைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தில் ஹீரோவாக நடித்து தனித்த முத்திரை பதித்துள்ளார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப். இந்த இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்கள் பிரதீப்பிடம் கதை கூறி வருகிறார்கள்.

ஆனால், பிரதீப் அடுத்து படம் ஒன்று இயக்கி நடிக்கவுள்ளார். அதனை முடித்துவிட்டு, மற்ற இயக்குனர்களின் படங்களில் நாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது. சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஆக்‌ஷன் கதை ஒன்றை இயக்கி நடிக்கவிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முடித்த பின்புதான் அடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகள் கேட்க முடிவு செய்திருக்கிறார்.

pradeep ranganthan to direct a film next
pradeep ranganthan to direct a film next