ராதிகாவை திட்டிய ஈஸ்வரி, நெஞ்சு வலியில் மயங்கிய கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
ராதிகாவை ஈஸ்வரி திட்ட கோபிக்கு நெஞ்சுவலி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டை விட்டு போக முடிவெடுத்திருப்பதை கோபியிடம் வந்து நேரில் பேசுகிறார்.அதற்கு கோபி இப்போ எதுக்கு வீட்டை விட்டு போகணும் என்று கேட்க ராதிகா முதலில் நடந்தது முதற்கொண்டு கோபியிடம் பேசுகிறார். பிரச்சினை நடந்த அப்போ உங்களை தேடி நான் அலைஞ்ச அது மட்டும் இல்லாம சர்ஜரி முடிஞ்சதுக்கு அப்புறம் தான் எனக்கு சொன்னாங்க. ஹாஸ்பிடல் வந்தப்பையும் உள்ள விடல சண்டை போடுறாங்க உங்க அம்மா முதற்கொண்டு உங்க பொண்ணு வரைக்கும் என்னை அசிங்கப்படுத்தி பேசுறாங்க என்றெல்லாம் பேசுகிறார். என்னால மயூ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது என்று சொல்லுகிறார். உடனே கோபி டென்ஷனாக பேச அவருக்கு நெஞ்சு வலி வந்து மயங்கி விழுகிறார் குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு முதலுதவி செய்து ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்கின்றனர்.
நான் வேணும்னே இப்படி பண்ணல பேசணும்னு தான் வந்த கோபப்படனும்னு தான் நினைக்கல என்று ராதிகா சொல்லுகிறார். ஹாஸ்பிடலுக்கு சென்ற கோபி என்னாச்சு என்று விசாரிக்க மயங்கி விழுந்த விஷயத்தை சொல்லுகின்றனர் இதனால் இது மாதிரி எப்பவும் ஆகக்கூடாது டென்ஷன் ஆக கூடாது உங்களுக்கு பெரிய சர்ஜரி நடந்திருக்கு நீங்க கேர்ஃபுல்லா இருக்கணும் இதனால உயிருக்கு கூட ஆபத்து வரலாம் என்று சொல்ல ஈஸ்வரியும் செழியனும் பதறுகின்றனர்.
மறுபக்கம் இனியா அழுது கொண்டே இருக்க நான் வேணும்னா எதுவுமே பண்ணல என்று ராதிகா சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் எங்க டாடி நல்லா தான் இருந்தாங்க ஆனா நீங்க பேசுனதுக்கப்புறம் தான் இப்படி ஆச்சு அன்னைக்கு தெரியாம தான் உங்களை திட்டினேன். ஆனா இன்னைக்கு தெரிஞ்ச சொல்ற உங்களால தான் எங்க வீட்டுல பிரச்சனை நடக்குது என்று சொல்லுகிறார்.
உடனே பாக்யா இனியாவை அதட்ட மறுபடியும் நீங்க எங்க டாடி கிட்ட பேசிட்டு இருக்க கூடாது இப்ப இப்ப இல்ல எப்பவுமே என்று சொல்ல பாக்யா இன்னும் கோபப்படுகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் இனிமேல் நீங்க இந்த வீட்டுக்கு வராதீங்க எங்க டாடிய பாக்காதீங்க என்றெல்லாம் பேச பாக்யா இனியாவை அரைக்கிறார். ராதிகா எனக்காக உங்களுக்குள் சண்டை வேண்டாம் என்று சொல்ல அது இப்ப இல்ல நீங்க எப்போ எங்க டாடிக்கு வாழ்க்கையில வந்தீர்களோ அப்பவே சண்டையும் கூட வந்துருச்சு என்று சொல்லுகிறார். பாக்கியா அமைதியா இருக்கறதா இருந்தா ரூமுக்கு போ என்று திட்ட அந்த நேரம் பார்த்து ஹாஸ்பிடலுக்கு போனவர்கள் வருகின்றனர்.
ராதிகா எப்படி இருக்கு கோபி என்று கேட்க ஈஸ்வரி அவரை எதுவும் பேசவிடாமல் நான் போய் ரூம்ல படுக்க வைக்கிறேன் என்று அழைத்து சென்று விடுகிறார். செழியன் வெளியே வந்த உடன் கோபியை பற்றி விசாரித்துவிட்டு உடனே ராதிகா அங்கிருந்து கிளம்ப ஈஸ்வரி அவரை நிறுத்தி எப்போ என் பையனுக்கு டைவர்ஸ் கொடுக்கப் போற அங்கு இருக்கிற வரைக்கும் நெஞ்சு வலி வர வரைக்கும் அவனை சாகடிக்காமல் விடமாட்டியா என்றெல்லாம் பேசுகிறார். உனக்கு இந்த வீட்டு பக்கம் வராதுன்னு சொன்னா புரியாதா இன்னொரு தாட்டி வந்தேனா நான் மனுஷியாக இருக்க மாட்டேன் என்று ராதிகாவை திட்டுகிறார். ராதிகா அமைதியாக சென்று விட பாக்யா இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கொடுமை எல்லாம் பார்க்க போறேன் எனக்கு தெரியல இவங்க பையன் மேல இருக்கிற பாசத்துல அவங்கள அசிங்க படுத்துறாங்க இவங்க ரெண்டு பேருமே தான் விரும்பி கல்யாணம் பண்ணிட்டாங்க அது எப்படி அவங்கள மட்டும் குறை சொல்ல முடியும் என்று கோபப்பட்டு சென்று விடுகிறார்.
கோபியை அவரது நண்பர் செந்தில் வந்து சந்திக்கிறார். செந்தில் என்ன சொல்லுகிறார்? அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.