Pushpa 2

ரோகினியை கோர்த்து விட்ட முத்து, மீனாவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பண விஷயத்தில் முத்து ரோகினியை கோர்த்து விட்டுள்ளார்.

siragadikka asai serial episode update 20-12-2024

siragadikka asai serial episode update 20-12-2024

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை இந்த சீரியலை இன்றைய எபிசோடில் முத்து நான் போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வரேன் என்று கிளம்ப அந்த நேரம் பார்த்து லோன் கொடுக்கும் ஆபீசர் வருகின்றனர். வீட்டோட ப்ராப்பர்ட்டையும் கடையோட ப்ராப்பர்ட்டியும் சேர்த்து உங்களுக்கு ரெண்டு கோடி சாம்சன் ஆகும் என்று சொல்லுகிறார்.

உடனே மனோஜ் இன்னும் எழுவது லட்சம் சேர்த்து கிடைக்குமா என்று கேட்க முடியாது இதுதான் கொடுக்க முடியும் என்று உறுதியாக இருக்கின்றனர் அண்ணாமலையும் கேட்க முடியாது என்று மறுத்துவிட்டு இரண்டு கோடி சேஷன் ஆகும் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். பிறகு அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு மனோஜ் அண்ணாமலை இடம் இதுக்கு நீங்கதான்பா ஏதாவது ஒரு முடிவு பண்ணனும் என்று கேட்கிறார்.

நான் என்ன பண்ண முடியும் என்று அண்ணாமலை கேட்க, என்னோட பங்க சொத்து வித்து கொடுங்க என்று கேட்கிறார். சொத்தா என்று கேட்க நம்ம வீடு இருக்கு இல்லப்பா அத வித்து என்னோட ஷேர் மட்டும் குடுங்க என்று கேட்க முத்து மற்றும் ரவி கோபப்படுகின்றனர். வீடு வித்துட்டு அம்மா அப்பா எங்க போவாங்க நாங்க எங்க போவோம் என்று கேட்கிறார். வித்தா உங்களுக்கு மேல ஷேர் கிடைக்கும் ரவியும் ரெஸ்டாரன்ட் வெச்சப்பா முத்துவும் டிராவல்ஸ் வச்சுப்போம் என்று சொல்ல ரொம்ப தாண்டா எங்க மேல அக்கறை என்று ரவி சொல்லுகிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அண்ணாமலை என்னால் வீடு விற்க முடியாது அதுவும் இல்லாமல் அது அவங்க அப்பா விஜயாவுக்காக வாங்கி கொடுத்த வீடு இதுல முடிவெடுக்க வேண்டியது நான் கிடையாது விஜயா தான் உனக்கு எவ்வளவு சப்போர்ட் பண்றத அமைதியா உட்கார்ந்திருக்கா பாரு என்று சொல்லுகிறார். மீண்டும் மனோஜ் வீட்டை விற்பது குறித்து பேச முத்து மற்றும் மனோஜிடையே பிரச்சனை ஏற்படுகிறது. உடனே முத்து மாமனார் வீட்ல வாங்க வேண்டியது என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகி நிற்கிறார்.

உடனே விஜயாவும் உங்க மாமாவுக்கு போன் போட்டு கேளுமா என்று சொல்லுகிறார். தயக்கமாக நின்று சரி என்று சொல்லி வித்யாவிற்கு ஃபோன் போட்டு சிங்கப்பூர் மாமாவிடம் பேசுவது போல் நாடகமாடுகிறார். கொஞ்ச நேரம் கழித்து அக்கவுண்ட்ல பணம் எல்லாம் பிரிஸா இருக்குன்னு சொல்றாங்க எடுக்க முடியாது ஆண்ட்டி இப்ப ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு என்று சொல்லிவிடுகிறார். உடனே மனோஜ் அதுதான் இப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்களா கேட்டுட்டேன் பாய் இப்ப நீ தான் பொறுப்பு என்று அண்ணாமலை இடம் கேட்கிறார்.

இந்த விஷயத்துல நான் முடிவு எடுக்க மாட்டேன் விஜயா தான் பார்த்துக்கணும் என்று சொல்லி அவர் கிளம்ப மனோஜ் விஜயாவிடம் வந்து நின்று கேட்க வீடு எல்லாம் வைக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார். நீங்க வீடு வாங்கறதுக்கு நீங்க ஏதாவது ரெடி பண்ணிக்கோங்க என்னால முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் முத்துவிடம் மீனா இவங்க அவங்க மாமா கிட்ட தான் பேசுனாங்களான்னு எனக்கு டவுட்டா இருக்குங்க இவங்களே கேட்டு இவங்களே பதில் சொல்லிக்கணும் மாதிரி இருந்தது என்று சொல்ல ஏதோ நாடகம் ஆடிட்டு இருக்கு பார்லர் அம்மா என்று முத்து சொல்லுகிறார்.

பிறகு ரவி வெளியில் யோசித்து நடந்து கொண்டிருக்க ஸ்ருதி வருகிறார் ரவி என்ன சொல்லுகிறார்?ஸ்ருதியின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

siragadikka asai serial episode update 20-12-2024

siragadikka asai serial episode update 20-12-2024