சூர்யாவிற்காக பெண் பார்க்கும் சுந்தரவல்லி, நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி மாதவியிடம் அந்த போட்டோ இருக்கிறது எனக்கே புடிக்கல நீங்க எப்படியாவது கழட்டிட சொல்லுங்க என்று சொல்ல, அப்போ போட்டோக்கு போஸ் கொடுக்கும் போது தெரிஞ்சு இருக்கணும் என்று சுரேகா சொல்லுகிறார்.சரி நீ போ என்று நந்தினி அனுப்பிவிட்டு மாதவி சுரேகாவிடம் இவளுக்கு அந்த போட்டோவை மாற்ற அதனால பயம் அம்மாவுக்கு அந்த போட்டோவை பார்த்தாலே கடுப்பாகும் பாத்துக்கலாம் என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கம் குடித்துக்கொண்டே சூர்யா பிரண்டுக்கு போன் போட்டு போட்டோ மாட்டிய விஷயத்தையும் சுந்தரவல்லி கடுப்பான விஷயத்தையும் சொல்லி சந்தோஷப்படுகிறார்.
போனை வைத்த உடனே நந்தினியின் போனில் அம்மாச்சி போன் பண்ண சூர்யா எடுத்துப் பேசுகிறார் எப்படி இருக்கீங்க பாட்டி நல்லா இருக்கீங்களா என்று கேட்க நல்லா இருக்கேன் தம்பி நீங்க எப்படி இருக்கீங்க என்று பாட்டி கேட்கிறார். நான் நல்லாவே இல்லை என்று சொல்ல உடனே நந்தினி வந்து போனை வாங்க முயற்சிக்க நான் தான் பேசுவேன் என்று சொல்லுகிறார் சூர்யா. நீங்க அன்னைக்கு ஊர்ல செஞ்சு கொடுத்தீங்களே அது செய்யறதுக்கு உங்க பேத்திக்கு தெரியலை என்று சொல்ல அது என்னப்பா பெரிய விஷயம் சாதம் வடிச்சதுல முன்னாடி நாள் நைட் தண்ணி ஊத்தி வச்சா நாளைக்கு கஞ்சி ஆயிடப்போகுது என்று சொல்லுகிறார். அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க ஊருக்கு வந்து ஒரு நாள் கண்டிப்பா எனக்கு இது செஞ்சு தரணும் என்று சொல்ல அம்மாச்சியும் சரி என சொல்லுகிறார் சரி நான் நந்தினி கிட்ட போனை கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை கொடுக்கிறார் சூர்யா.
நந்தினி அம்மாச்சி இடம் எப்படி இருக்கின்றாய்? என்ன என்று நல விசாரித்துக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா நீ வேலைக்கு போற விஷயத்தை சொல்லு சொல்லு என்று மெதுவாக சொல்ல என்ன விஷயம் என்று நந்தினி கேட்க ரஞ்சிதா போனை வாங்கி அம்மாச்சி மில்லுக்கு வேலைக்கு போகுது என்று சொல்லுகிறார். நீ எதுக்கு அம்மாச்சி இந்த வேலைக்கு போயிட்டு இருக்கேன் என்று சொல்ல முன்னாடி தோப்புல வேலை செஞ்சோ காசு போட்டுட்டு இருந்தாங்க ஆனா இப்ப அது வரது கிடையாது வீட்டு செலவுக்கு போய் தான ஆகணும் என்று சொல்ல சரி அம்மாச்சி நான் அப்புறம் பண்றேன் ஏன்னா போன வைத்து விடுகிறார். கல்யாணம் புஷ்பாவிடம் இந்த காபிய நந்தினி கிட்ட குடுத்துடு என்று சொல்ல நான் எதுக்கு குடுக்கணும் அவ்வளவு நம்மள மாதிரி ஒரு வேலைக்காரி தானே என்று சொல்ல நீயும் நானும் மட்டும்தான் வேலைக்காரவங்க அவங்க இந்த வீட்டோட மருமக என்று கல்யாணம் சொல்லுகிறார் காபியை கொடுத்து அனுப்ப எதிரில் நந்தினி வர உனக்கு தான் அம்மா காபி கொடுத்துவிட்டு இருக்கேன் எடுத்துக்கோ என்று கல்யாணம் சொல்லுகிறார். நந்தினி புஷ்பாவிடம் உனக்கு எவ்வளவு சம்பளம்கா என்று கேட்க 15 ஆயிரம் என்று சொல்லுகிறார். கல்யாணத்திடம் உங்களுக்கு சம்பளம் போட்டுட்டாங்களா அண்ணா என்று கேட்க போட்டுட்டாங்க அம்மா என்று சொல்லுகிறார். இந்த வீட்ல வேலை செய்ற எல்லாருக்கும் போட்டுட்டாங்களா என்று கேட்க எல்லாருக்கும் ஒன்றாம் தேதியே வந்துடுமா என்று சொல்லுகிறார். ஆனா எனக்கு மட்டும் இன்னும் சம்பளமே போடலனா என்று சொல்ல ஏமா இப்படி பேசிகிட்டு இருக்க நீ ஏன்மா உனக்கு ஏன்மா சம்பளம் கொடுக்கணும் என்று கேள்வி கேட்கிறார் நானும் உங்கள மாதிரி ஒரு வேலைக்காரி தான் நான் போய் அய்யா கிட்ட பேசுறேன் என்று வருகிறார்.
அருணாச்சலத்திடம் ஐயா உங்ககிட்ட ஒன்னு கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க எனக்கு நீங்க வந்ததுல இருந்து இன்னும் சம்பளமே கொடுக்கலை என்று சொல்ல நீ சம்பளம் வாங்குற இடத்துல இல்லமா கொடுக்குற இடத்துல தான் இருக்கு இப்படி பேசுறது மனசு கஷ்டமா இருக்கு என்று அருணாச்சலம் சொல்லுகிறார். எனக்கு என்னோட குடும்பம் இருக்கா ஐயா என்று சொல்ல, இதுவும் உன்னோட குடும்பம் தாம்மா என்று சொல்ல இல்லையா இது என்னோட ஐயா குடும்பம் எனக்குன்னு அம்மாச்சியும் என்னோட தங்கச்சிகளும் இருக்காங்க அவங்க என்ன பண்றாங்கன்னு தான் நான் டெய்லி யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். என்னோட அம்மாச்சி வேலைக்கு போறாங்க என்ற விஷயத்தை கேள்வி பட்டவுடன் நைட் வந்து எனக்கு தூக்கமே இல்லை என்று சொல்கிறார் எதுக்கு வேலைக்கு போகணும் என்று அருணாச்சலம் கேட்க வேற என்னையா பண்ணுவாங்க உங்களுக்கு தோப்புல வேலை செஞ்சிட்டு இருக்கும்போது சம்பளம் கொடுத்துட்டு இருந்தீங்க ஆனா நான் இப்ப அதை பத்தி கேட்க வரல வேலை செய்யாம எப்படி சம்பளம் வாங்க முடியும் நான் செய்ற வேலைக்கு மட்டும் சம்பளம் கொடுங்க என்று கேட்கிறார். உடனே அருணாச்சலம் எனது சம்பளம் கொடுக்கறது இல்லையா என்று போன் பண்ணி கணக்கு வழக்கு பார்ப்பவரிடம் கேட்கிறார். அம்மா தான் கொடுக்க வேணாம்னு சொன்னாங்க என்று சொல்ல என்ன கேட்காம எதுக்கு நிறுத்துனீங்க என்று திட்டிவிட்டு ஃபோனை வைக்கிறார். கவலப்படாதம்மா எனக்கு தெரியாம இந்த விஷயம் நடந்திருச்சு இதுக்கு மேல உங்க குடும்பத்தை கைவிடமாட்டேன் நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னேன். வேணா ஏன் எங்களுக்கு மட்டும் சம்பளம் கொடுங்க போதும் என்று சொல்ல அப்படியா சம்பளம் கொடுக்கிறான் அப்போ அக்கவுண்ட்ல மாசம் ஒரு லட்ச ரூபா குடுக்குற என்று சொல்ல எனக்கு அவ்வளவு எல்லாம் வேணாம் ஐயா புஷ்பா அக்காக்கும் கல்யாணம் அண்ணனுக்கு எவ்வளவு கொடுக்குறீங்களோ அதை குடுங்க போதும் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வருகிறார். அருணாச்சலம் நந்தினியை நீ போமா என்று சொல்லிவிட்டு என்ன பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்க இவர்கிட்ட சொன்னா பிரச்சனையாகும் என்று மனதில் நினைத்துக் கொண்டு டின்னர் கேட்டா சொன்னேன் என்று சொல்லுகிறார். பிறகு நம்ம தான் சிங்காரம் குடும்பத்தை பார்த்துக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டு நம் வாக்கிங் போயிட்டு வரேன் என்று கிளம்புகிறார்.
நந்தினி அம்மாச்சிக்கு போன் போட ரஞ்சிதா போனை எடுக்கிறார். எல்லாரும் என்ன பண்றீங்க சாப்டீங்களா என்று கேட்க அம்மாச்சி சமைச்சுக்கிட்டு இருக்காங்க சாப்பிடணும் நீ சாப்டியா அக்கா என்று கேட்கிறார். பெரிய மனுஷி மாதிரி கேள்வி எல்லாம் கேக்குற அம்மாச்சி கிட்ட போன குடு என்று சொல்லுகிறார். இனிமே நீ ரைஸ் மில் வேலைக்கு போக வேண்டாம். உனக்கு இனிமேல் ஐயா வீட்டில் இருந்து உனக்கு 20,000 சம்பளம் வந்துவிடும் என்று சொல்லுகிறார். சம்பளமா என்று கேள்வி கேட்க, ஆமா இந்த வீட்ல நான் எவ்வளவு வேலை பார்க்கிற அதுக்காக நான் ஐயா கிட்ட கேட்டேன் என்று சொல்லுகிறார். அம்மாச்சி உனக்கு அந்த வீட்டு மருமகளா எண்ணமே தோணாதா என்று சொல்ல, நான் எப்பவுமே வேலைக்காரி தான் என்று சொல்லிவிட்டு, நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் அம்மாச்சி என்று சொல்லுகிறார்.
உடனே ரஞ்சிதா போனை வாங்கி அக்காவுக்கு காலேஜ் சேர போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கா என்று சொல்ல, அம்மாச்சி போனை வாங்கி உங்களுக்கு வேற வேலை இல்ல நீ வை என்று சொல்லி வைத்து விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி போனை பார்த்துக் கொண்டிருக்க அருணாச்சலம் போனை வாங்கி என்ன பொண்ணுங்க போட்டோவா இருக்கு என்று கேட்கிறார். அதற்கு சுந்தரவல்லி சூர்யாவிற்கு பொண்ண பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்லுகிறார்.
அருணாச்சலத்தை பார்த்த நந்தினி செய்ற வேலைக்கு சம்பளம் கொடுத்தால் மட்டும் போதும் எக்ஸ்ட்ரா நீங்க ஒரு ரூபா கூட தர வேணாம் என்று சொல்லுகிறார். மறுபக்கம் விஜி மற்றும் கணவரை அழைத்து அருணாச்சலம் நந்தினிக்காக எதையோ பேசிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து நந்தினி வந்து விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்