Pushpa 2

நீங்கள் இயக்கியதில் அதிக உழைப்பை எடுத்துக்கொண்ட படம் எது?: வெற்றிமாறன் பதில்..

நாளை 20-ந்தேதி விடுதலை-2 ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ள திரையனுபவம் வருமாறு:

திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாவது பாகம் உருவாகி நாளை வெள்ளிக்கிழமை 20-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கும் ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது. இப்படத்தின், ‘தினம் தினமும்’ என்ற முதல் பாடல் வெளியாகி வைரலானது. இளையராஜா குரலில் வெளியான இந்த பாடல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், நேர்காணலில் பங்கேற்ற வெற்றி மாறனிடம், ‘நீங்கள் இயக்கிய படங்களிலேயே கடினமான உழைப்பைக் கோரிய படம் எது?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு வெற்றி மாறன்,

‘நான் இயக்கியதிலேயே ‘ஆடுகளம்’ கடினமான படமாக இருந்தது. ஆனால், ‘விடுதலை 1’ மற்றும் ‘விடுதலை 2’ படங்கள் அதைவிட கடினமாக அமைந்துவிட்டது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அதிக உழைப்பை எடுத்துக்கொண்ட படமாக விடுதலை உருவாகியிருக்கிறது.

கடைசி நேரத்தில் படத்தில் உள்ள 8 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளோம். படக்குழுவில் இருந்த அனைவருக்கும் இது ஒரு அனுபவம். இந்த பயணமே மிகப் பெரியது. எல்லாருடைய பங்களிப்பும்தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளது’ என்றார்.

உழைப்பே உயர்வு என்பது போல, இயக்குனரின் பெயருக்கேற்ப விடுதலை இரண்டாம் பாகமும் வரவேற்பு பெறும், இனிதான வெற்றி தரும்.!

viduthalai film that is more difficult than aadukalam vetri maran
viduthalai film that is more difficult than aadukalam vetri maran