திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்ற ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படம், எப்போ ரிலீஸ் தெரியுமா?
ஜீவா நடிப்பில் ‘கற்றது தமிழ்’ என்ற படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் ராம். இதனைத் தொடர்ந்து ‘தரமணி’ படத்திலும் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.
பின்னர், மம்முட்டி நடிப்பில் ‘பேரன்பு’ திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் ‘ஏழுமலை ஏழு கடல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உருவாக்கத்தில் இருந்து வருகிறது.
இப்படத்தில் நிறைய விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்படுகின்றன. தற்போது படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. பின்னர், ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
அந்த இரண்டு விழாக்களிலும் இந்த படத்துக்கு அதிகளவு வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன. அதையடுத்து, பல திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றது. இந்நிலையில், இப்போது இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
படம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளரின் மற்றொரு படமான ‘வணங்கான்’ ஜனவரி 10-ம் தேதி ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.
கமர்ஷியல் சினிமாவில், சிறந்த படைப்புகளை தயாரிக்கத் துணிந்த தயாரிப்பாளர் பாராட்டுக்குரியவர். இவரது இரு படங்களையும் பார்ப்போம், ரசிப்போம்.!