Pushpa 2

கேஸ் வாபஸ் வாங்கிய பாக்யா, ஈஸ்வரியை மிரட்டி எடுக்கும் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேஸ் வாபஸ் வாங்க ராதிகா ஈஸ்வரியை மிரட்டியுள்ளார்.

BaakiyaLkashmi Serial Today Episode Update 13-01-25
BaakiyaLkashmi Serial Today Episode Update 13-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டில் ஒரு பக்கம் பாக்கியாவும் ஒரு பக்கம் கோபியம் நின்று கொண்டிருக்க கோபியின் வக்கீல் பேச ஆரம்பிக்க பாக்யாவின் வக்கீல் பேச அவசியம் பாக்யா கேசை வாபஸ் வாங்குவதாக சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார். இதனால் கோபி மற்றும் ராதிகா இது இருவரும் அதிர்ச்சி அடைந்த சந்தோஷப்படுகின்றனர். ஆனால் ஜட்ஜ் நீங்களே முடிவெடுக்கிறதுக்கு எதுக்கு கோர்ட்டுக்கு வந்தீங்க என்று திட்டுகிறார். பாக்யா மன்னிச்சிடுங்க சார் குடும்ப பிரச்சனை என்று சொல்ல அப்ப அவர் குடும்ப பிரச்சினை காரணமாக பிரியாணில கெட்டுப்போன இறைச்சியை கலந்தாரா என்று கேட்க எதுவும் பேச முடியாமல் நிற்கிறார் பாக்யா இல்ல நீங்களே அவர் மேல பொய் கேஸ் போட்டிங்களா என்றெல்லாம் கேட்க பாக்யாவின் வக்கீல் அது அவங்களோட பர்சனல் சார் குடும்ப விஷயமா வெளியே பேசி முடிவெடுத்துக்கிட்டாங்க அதனால என்று சொல்ல உங்க மேல பைன் போடலாம் தெரியும் என்று சொல்ல மீண்டும் பாக்யா மன்னிப்பு கேட்கிறார் பிறகு கோர்ட் கேசை தள்ளுபடி செய்கிறது..

பாக்யா எழிலிடம் பேசியதை நினைத்துப் பார்க்கிறார் அவர் ஏற்கனவே எழிலிடம் கேசை வாபஸ் வாங்கப் போக முடிவை சொல்லி இருக்கிறார். அத்தைக்காகவும் இனியாவுக்காகவும் தான் இந்த முடிவு அது மட்டும் இல்லாம அவர் பண்ண பாவத்துக்கு கடவுளே தண்டித்து விட்டார் திருப்பியோ அரெஸ்ட் ஆகி அதுனால அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா எனக்கும் குற்ற உணர்ச்சியா இருக்கும் அதனால இந்த முடிவெடுக்க போறேன் என்று சொல்லி விடுகிறார்.உடனே ராதிகாவும் கோபியும் பாக்யாவிடம் நன்றி சொல்லுகின்றனர்.

மறுபக்கம் ஈஸ்வரி செழியன் இனியா என மூவரும் பதற்றத்தில் இருக்க என்னாச்சு கோபி ஜெயிலுக்கு போயிட்டானா என்று டென்ஷனாக யோசித்துக் கொண்டிருக்க செழியன் போன் போட்டாலும் போன் எடுக்காமல் இருக்கின்றனர் உடனே ஈஸ்வரி ஜெயிலுக்கு போய் விட்டதாக முடிவெடுத்து விட்டார். ராதிகாவிற்கு ஃபோன் போட்டு பார்க்க ராதிகாவும் எடுக்காததால் பதற்றத்தில் இருக்க கேட் தரக்கும் சத்தம் கேட்டு இனியா டாடி வந்துட்டதாக சொல்லி ஓடுகிறார் உடனே பண்ண எடுக்கல என்று கேட்க சைலன்ட்ல போட்டு இருந்தோம் என்று சொல்லுகின்றனர். உடனே செழியன் என்னப்பா ஆச்சி. மறுபடியும் எப்போ வர சொல்லி இருக்காங்க என்றெல்லாம் கேட்க அதுக்கெல்லாம் அவசியம் இல்லை என்று ராதிகா சொல்லுகிறார். உடனே கோபி பாக்ய கேசவாபஸ் வாங்கிட்டா மா என்று சொல்லுகிறார். உடனே பாக்யா வர எதுவும் பேசாமல் அமைதியாக போக இனியா பாக்கியாவை நிற்க வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தேங்க்ஸ் என்று சொல்ல அவளுக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்ற அவ என்ன பண்ணிட்டா என்று கேட்கிறார். அப்பவே கேஸ் குடுக்காம இருந்திருந்தா இந்த பிரச்சனை வந்தே இருக்காது. கோர்ட்டில் எத்தனை போய் நிக்க வச்சது மட்டுமில்லாமல் இவளுக்கு மன்னிப்பு வேறயா என்று திட்ட பாக்யா எதுவும் பேசாமல் கிச்சனுக்கு சென்று விடுகிறார் உடனே கோபி என்னமா பேசிகிட்டு இருக்கீங்க நான் பண்ணது எவ்ளோ பெரிய பிராடுத்தனம் அயோக்கியத்தனம் தெரியுமா ஆனால் அதெல்லாம் மறந்து என்ன கேஸ்ல இருந்து வாபஸ் வாங்க வச்சிருக்க பாக்கியா. நீங்க பாராட்டில நான் கூட பரவால்ல திட்டாதீங்க என்று சொல்லுகிறார்.இதே நான் என்னோட ரெஸ்டாரண்ட்ல இது மாதிரி வேற யாராவது வேலை பார்த்து இருந்தாலும் இல்ல, பாக்கியாவுக்கு இந்த மாதிரி துரோகம் வேற ஒருத்தர் பண்ணி இருந்தாலும் நீங்க சும்மா இருந்திருப்பீங்களா? புள்ள என்றதுக்காக எதுக்கு அநியாயமா பேசுறீங்க என்று பேச ஈஸ்வரி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் உடனே பாக்யாவிடம் வந்து ரொம்ப நன்றி பாக்யா என்று கோபி சொல்லுகிறார்.உடனே செல்வி கோபி சார் இருக்கிற நன்றி கூட உங்க அம்மா மாமியாருக்கு இல்ல என்று சொல்லுகிறார்.

பிறகு பாக்யா சாப்பிட்டுக் கொண்டு இருக்க ராதிகா கிச்சனுக்கு வந்து ஃப்ரிட்ஜை திறந்து பார்த்து மீண்டும் டைனிங் டேபிளில் இருக்கும் ஆப்பிளை கட் பண்ண எடுக்கிறார் நீங்க சாப்பிடலையா என்று கேட்க சாப்பிடறதுக்காக தான் ஆப்பிள் எடுக்கிறேன் என்று சொல்லுகிறார் இது எப்படி பத்தும் வாங்க எங்கேயோ சாப்பாடு நிறைய இருக்கு சாப்பிடுங்க என்று சொல்ல ராதிகாவும் சாப்பிடுகிறார். இந்த குடும்பத்துக்காக ஒரு முடிவெடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி என்று சொல்லுகிறார். உங்க கையால சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு நீங்க எப்படி வேலையும் இதையும் பாத்துக்குறிங்க என்று கேட்க, நீங்க கூட தான் செய்றீங்க என்று சொல்லுகிறார். நானும் வீட்ல செய்றேன் நீங்க ஒரு நாள் கூட வீட்ல வேலை பார்க்க முடியாதுல்ல லீவு கிடையாது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் பேசுவதை ஈஸ்வரி மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பாக்யாவிடம் ராதிகா உங்க அத்தை அப்படி பேசினத நீங்க திருப்பி என்ன வேணா பேசி இருக்கலாம் அவங்கள வாய் அடைக்க வச்சு இருக்கலாம் நீங்க எதுவுமே பண்ணலையே ஏன் என்று கேட்க அதற்கு பாக்யா நீ இருக்கிறதிலேயே பெரிய வக்கீல நீங்க அரேஞ்ச் பண்ணுங்க ஆனா உங்க மனசுல அவர ஜெயிலுக்கு போயிடுவாருன்ற ஒரு பயம் இருந்தது தானே, என்று கேட்க ராதிகா ஆமாம் என்று சொல்லுகிறார் நீங்களே இவ்வளவு பயப்படும்போது பெத்த அம்மா எப்படி பயப்படுவாங்க அவங்க அந்த கோவத்துல பேசுறாங்க அதெல்லாம் எப்படி பெருசு பண்ண முடியும் அதுவும் இல்லாம அவங்க எனக்கு எத்தனையோ நாள் அம்மாவா இருந்து என்கூட உதவி பண்ணியதுக்காக இதுக்காக நான் உங்ககிட்ட கோபப்பட முடியாது என்று பேசுகிறார். இதுவே நானா இருந்தனா அவங்கள தட்டி வச்சிருப்பேன் என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியா ஈஸ்வரி இடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்ப ராதிகா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி ராதிகாவிடம் என்ன பேசுகிறார்?அதற்கு ராதிகாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLkashmi Serial Today Episode Update 13-01-25
BaakiyaLkashmi Serial Today Episode Update 13-01-25