Pushpa 2

ட்ராமாவை ஆரம்பித்த ரோகினி, முத்துக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வழக்கம்போல் டிராமாவை ஆரம்பித்துள்ளார் ரோகினி.

SiragadikkaAasai Serial Today Episode Update 13-01-25
SiragadikkaAasai Serial Today Episode Update 13-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பரபரப்பாக காய்கறிகளை வெட்டிக் கொண்டிருக்க ஸ்ருதி அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். எல்லா வேலையும் நீங்க எப்படி செய்றீங்க உங்களுக்கு டயர்டாவே இல்லையா. நான் எல்லாம் இரண்டு மணி நேரம் டப்பிங் பேசலாமே டயர்ட் ஆயிடுவ என்று சொல்லுகிறார். அதற்கு மீனா எனக்கு எல்லாமே பழகிருச்சுங்க எங்க வீட்ல நாங்க வெளிய வேலை செஞ்சுட்டு வந்து வீட்லயும் செய்வோம் என்று சொல்லுகிறார்.

வேணும்னா நம்ம இங்க ஒரு ஆள வச்சுக்கலாமே என்று சொல்ல நான் இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி ஒரு ஆள் இருந்தாங்க நான் வந்த மறுநாளே அத்த அவங்கள வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிட்டாங்க இந்த வீட்டை பொறுத்த வரைக்கும் என்ன அவங்க ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரிய தான் பார்க்கிறாங்க என்று வருத்தப்பட ஸ்ருதி என்ன மட்டும் அப்படி நினைச்சாங்க நான் சும்மா விடமாட்டேன் இப்ப வேணாம் சொல்லுங்க நான் போய் கேட்கிறேன் என்று எழுந்து போக மீனா வேண்டாம் என தடுத்து உட்கார வைக்கிறார். ஒருநாள் அத்தை மனசு மாறனும்னு நம்புறேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே விஜயா வர இவ்வளவு காய்கறி வச்சிக்கிட்டு என்ன கல்யாணத்துக்கு சமைக்க போறியா என்று கேட்க எல்லா ஒரு ரெண்டு பேரு சாப்பிட கூட்டிட்டு வரேன்னு சொல்லி இருக்காரு என்று சொல்லுகிறார். அவர் வந்தா கேட்டுக்கோங்க என்று சொல்ல அவன் வந்தால் என்னிடம் பிரச்சனை பண்ணுவ தானே நானே போன் பண்ணி கேட்டுக்குறேன் என்று சொல்லி வர அண்ணாமலை என்ன விஷயம் என்று கேட்கிறார்.

எதுக்கு இப்ப சாப்பாடு ஏற்பாடு எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல அவன் ஏற்கனவே என்கிட்ட போன் பண்ணி சொல்லிட்டா ரெண்டு பேர் சாப்பிட வருவாங்கன்னு நம்ம மட்டும் சாப்டா பத்தாது ரெண்டு பேரும் வர வச்சு சாப்பாடு போடுறதுல ஒன்னும் ஆய்டாது என்று சொல்ல விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக விடுகிறார். மறுபக்கம் மனோஜ் சிசிடிவி கேமரா விஷயமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அதிகாரம் பண்ணி பேசுகிறார். இதனால் கடுப்பான போலீஸ் கம்பிளைன்ட் எழுதி கொடுத்துட்டு போய் என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும் என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். கிச்சனில் பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்க ரோகிணி வருகிறார். இன்னைக்கு என்ன ஸ்பெஷல் கமகமன்னு வாசனை வருது என்று சொல்ல ஸ்ருதி முத்து இருவரையும் கூட்டிட்டு வருவதை பற்றி சொல்ல ஓ பொண்ணு வாங்கினா ஒன்னுக்கு என்ற மாதிரி முத்து ஓட கார்ல வந்தா சாப்பாடு ஃப்ரீயா என்று பேசுகிறார் ரோகிணி. அதற்கு சுத்தி போவதற்கு சாப்பாடு போடுவதால் என்ன விட போது அவங்க வயசானவங்க அவங்களுக்கு சாப்பாடு போடணும்னு முத்து நனைக்கிறாரு இதுல என்ன தப்பு இருக்கு என்று சொல்ல நான் சும்மாதான் சொன்னேன் கோபப்படாதீங்க என்று சொல்லிவிட்டு சாப்பாடு ரெடி ஆனவுடன் கூப்பிடுங்கள் என்று சொல்லிக் கிளம்புகிறார்.

கொஞ்ச நேரத்தில் முத்து அவர்களை வீட்டுக்கு அழைத்து வருகிறார். முத்துவை பற்றி அவர்கள் பெருமையாக பேச குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். அம்மா அப்பாவை பார்த்துக்கிற மாதிரி பார்த்துக்கிறாரு எங்கள விட்டுட்டே போயிருக்கலாம் ஆனால் எல்லாத்தையும் சுத்தி காமிச்சி நல்லா பாத்துக்கிட்டாரு என்று பேசுகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் அண்ணாமலை வெளிநாட்டிலிருந்து வந்து இருக்கீங்க ன்னு சொன்னாங்க எந்த ஊர் என்று கேட்கிறார். உடனே முத்து நம்ம பார்லர் அம்மா ஊர்தான்பா மலேசியாவில் இருந்து வந்திருக்காங்க என்று சொல்லுகிறார் உடனே இதைக் கேட்ட ரோகினி ரூமில் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

உடனே விஜயா சந்தோஷப்பட்டு என் மருமகளும் மலேசியா தான் என்று சொல்ல மலேசியாவில் எந்த இடம்னு சொல்லுங்க எனக்கு எல்லா இடமும் தெரியும் என்று பேசிக் கொண்டிருக்க விஜயா ஓடிவந்து ரோகிணி ரோகினி என கூப்பிட ரோகிணி என்ன சொல்வது என தெரியாமல் நிற்கிறார். பிறகு ரவியிடம் நீங்க அங்க கூட ரெஸ்டாரன்ட் வைக்கலாம் நல்லா பிசினஸ் ஆகும் என்று சொல்ல எனக்கு ஐடியா இருக்கு பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருக்க ரோகினி என்ன செய்வது என்று புரியாமல் உள்ளே முழித்துக் கொண்டு நிற்கிறார்.

ரோகினி தப்பிக்க என்ன பிளான் போடுகிறார்? சிக்காமல் எப்படி தப்பிக்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 13-01-25
SiragadikkaAasai Serial Today Episode Update 13-01-25