ராதிகாவிடம் கெஞ்சிய கோபி, புலம்பும் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ராதிகாவிடம் கோபி கெஞ்ச வீட்டில் ஈஸ்வரி என்ன நடக்கும் என்று புலம்பி கொண்டு இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவிடம் என் பையன் உடைந்து போய் இருக்கா என்று சொல்ல அதற்கு பாக்கியம் இப்ப என்ன ஒட்ட வைக்கலாம் என்று கேட்கிறார். நான் நல்லவ தான் ஆனா என்னோட முன்னாள் கணவரோட இன்னால் மனைவி பிரிந்ததற்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு நல்லது கிடையாது என்று சொல்ல ஈஸ்வரி நீ ஒன்னும் பண்ண வேண்டாம் எனக்காக மட்டும் ஒன்னு பண்ணு என்று சொல்லிவிட்டு அவனை வீட்டை விட்டு மட்டும் வெளியே போக சொல்லாத ஏற்கனவே அவ விட்டுட்டு போயிட்டா அவனே அனுப்பவும் எனக்கு மனசு இல்ல என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
உடனே செல்வி அப்போ நீ கோபி சார் கிட்ட வாடகை வாங்கிட்டு அனுப்ப போறது இல்லையா அக்கா என்று கேட்க நாளைக்கு கோர்ட்டுக்கு போயிட்டு வரட்டும் அப்புறம் பேசிக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். மறுநாள் பாக்கியா கிச்சனின் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற செல்வி தக்காளி வெட்டிக்கொண்டு எதையோ யோசித்துக் கொண்டே இருக்கிறார் பாக்யா கூப்பிட்டது கேட்காமல் கூட யோசித்துக் கொண்டிருக்க என்ன ஆச்சு என்ன யோசிக்கிறேன் என்று கேட்க அதற்கு செல்வி நாளைக்கு கோர்ட்ல என்ன நடக்கும் என்று கேட்க அதற்கு பாக்யா ரெஸ்டாரண்டுக்கு ஆள் தேவைப்படுதுன்னு சொன்னேனே அதைப்பற்றி யோசிச்சியா என்று கேட்க இல்லை என்று சொல்லுகிறார் காய் கட் பண்றதுக்கு ஆள் வேணும்னு சொன்னேனே விசாரிச்சியா என்று கேட்க இல்லை என்று சொல்லி சொல்ல இத முதல்ல பாரு என்று சொல்லிவிடுகிறார்.
ஈஸ்வரியும் செழியணும் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க கோபி கீழ இறங்கி வருகிறார் ஈஸ்வரி இடம் கோர்ட்டுக்கு போவதாக சொல்ல கோர்ட்டுக்கு எதுக்கு போகணும் போக வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்லுகிறார். ஆனால் செழியன் போகலன்னா எப்படி பாட்டி என்று கேட்கிறார் போகலைன்னா என்ன ஆகும் என்று செழியனிடம் கேட்க அதற்கு எனக்கு என்ன ஆகும்னு சரியா தெரியாது ஆனா ரெண்டு மூணு வாட்டி வர சொல்லுவார்கள் அப்படி வரவில்லை என்றால் தீர்ப்பு அவங்களுக்கு சாதகமா கொடுத்துடுவாங்க என்று சொல்ல அப்போ ராதிகாவுக்கு டைவர்ஸ் கொடுத்துடுவாங்களா அப்படித்தானே அவ தானே டைவர்ஸ் கேட்டா வாங்கிட்டு போகட்டும் கோபி போக வேண்டாம் என சொல்லுகிறார். ஆனால் கோபி நான் போய் ஆகணும் ராதிகா என் கூட வாழறது வாழாததோ அப்புறம் இந்த முடிவுக்கான காரணத்தையும் என் மனசுல இருக்குற விஷயத்தையும் நான் ராதிகா கிட்ட பேசணும் நான் இப்ப பேசணும்னா வேற எப்பையுமே பேச முடியாது தயவு செஞ்சு என்னை விடுங்க நான் போயிட்டு வரேன் என்று சொல்ல சரி செழியன் நீ கூட போ என்று சொல்லுகிறார் கோபி வேண்டாம் நான் தனியாவே போற எனக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்காது என்று சொல்ல சரி நான் வருகிறேன் என்று சொன்ன கோபி நீங்க வேண்டாமா? நீங்க எதுக்கு வரிங்க என்று கேட்க அவளை நாக்க புடுங்குற மாதிரி அவல நாலு கேள்வி கேட்டுட்டு வரேன் என்று சொல்லுகிறார் ஆனால் கோபி நீங்க யாரும் வர வேண்டாம் நானே போய் பேசிட்டு வரேன் என்று கிளம்புகிறார்.
செல்வி வீடு தொடைத்து கொண்டிருக்க ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்து கோபி போய் முக்கா மணி நேரம் ஆகுது போன் எடுக்க மாட்டேங்குற என்ன நடக்குதுன்னு தெரியல என்று புலம்பிக்கொண்டிருக்க பாக்யா இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ரெஸ்டாரன்ட் போயிடுவேன் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்க மனநிம்மதி தான் வேணும் என்ற கேட்கிறார் உங்க மன நிம்மதிக்கு இங்க என்ன குறை இருக்கு என்று சொல்ல இவன் வேற அந்த மாயக்காரிய பார்க்க போயிருக்கான் என்று சொல்லுகிறார் மாயக்காரியா யாருமா என்று செல்வி கேட்க அந்த ராதிகா தான் என்று சொல்லுகிறார். அவ நாடகம் போட்டு ஏமாத்தி கோபியை அவள் பக்கம் கூட்டிட்டு போயிட்டு வா என்று சொல்ல பாக்கியா அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை அது நல்லது தானே உங்க பையன் ஒன்னு குழந்தை கிடையாது அவருக்கும் அவங்க கூட வாழனும்னு ஆசை இருக்கு என்று சொல்ல அவ கோபிய சரியா பாத்துக்க மாட்டா என்று புலம்பிக்கொண்டே இருக்க பாக்யா நான் ரெஸ்டாரண்டுக்கு கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் கோபி ராதிகாவை கோர்ட்டில் வந்து சந்திக்க அவரிடம் ராதிகா எப்படி இருக்கீங்க கோபி நல்லா இருக்கீங்களா என்ன இருவரும் நலம் விசாரித்துவிட்டு இப்ப கூட உங்க வீட்டுக்கு போயிட்டு தான் வர ராதிகா முதல் வாட்டி போகும்போது உங்க அம்மா இருந்தாங்க வீட்ல வேற யாரும் இல்ல இரண்டாவது வாட்டி போகும்போது அவங்களும் இல்ல வீடு காலி பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்க என்று சொல்ல இப்போ நான் இங்க இல்ல கோபி நான் ஏர்போர்ட்ல இருந்து வரேன் என்று சொல்ல ஏர்போர்ட்டா அப்போ எங்க போய்ட்டீங்க ராதிகா என்று கேட்க பெங்களூர் போயிட்டேன் என்று சொல்லுகிறார். என்கிட்ட கூட சொல்லாம எதுக்கு ராதிகா இல்லை முடிவு எடுத்தேன் நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் மயூ பற்றி கேட்க அதற்கு ராதிகா மயூவ நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். என்னோட சைடும் ரொம்ப தப்பு இருக்கு நான் புரிஞ்சுக்கறேன் நான் இல்லன்னு சொல்லல ஆனா எல்லாத்துக்கும் ஒரே ஒரு வாய்ப்பு கொடு நம்ம நினைச்ச மாதிரி சந்தோஷமான வாழ்க்கையை நம்ப வாழலாம் என்று சொல்ல ராதிகா ரெண்டு இடத்துலயுமே வாழ ஆசைப்பட்ட எதுவும் நடக்காது கோபி என்று சொல்ல ஒரு வாய்ப்பு கொடு ராதிகா என்று கண்கலங்கி கோபி கெஞ்ச ராதிகா சென்று விடுகிறார்.
கோர்ட்டில் என்ன கேட்கின்றனர்? அதற்கு ராதிகாவின் பதில் என்ன? கோபி என்ன செய்யப் போகிறார்?என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
