விஜயா போட்ட திட்டம், என்ன செய்யப் போகிறார் மீனா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
விஜயா போட்ட திட்டத்தை முறியடித்து ஆர்டரை செய்து முடிப்பாரா மீனா என்பதை பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செல்வம் முத்துவிற்கு ஃபோன் போட்டு என்னோட காருக்கு ஆயிரம் ரூபாய் பைன் போட்டுட்டாங்க என்று சொல்ல,பேப்பர் எதுவும் சரியில்லையா என்று கேட்கிறார். எல்லாமே கரெக்டா தான் இருந்தது ஆனா ஃபைன் போட்டது அந்த கான்ஸ்டபிள் அருண் தான். நம்ம ஹோட்டலில் வைத்து கிண்டல் பண்ணதுக்கு இப்படி பண்ணி இருக்கா என்று சொல்லுகிறார்.
அவன் ஏதாவது பழி வாங்கணும்னா என்ன வாங்கி இருக்க வேண்டியதுதானே உன்னை எதுக்கு இப்படி பண்ணனும் சரியான நேரம் வரட்டும் மாமா கொட்டத்தை அடக்குற என்று பேசிக்கொண்டு வர விஜயா வருகிறார். முத்து ஃபோனை வைத்த பிறகு புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து கொட்டத்தை அடக்குறேன்னு பேசிகிட்டு இருக்கீங்க என்று கோபப்பட்டு பேசிவிட்டு சென்று விடுகிறார். என்னாச்சு மீனா என்று கேட்க, யாரோ அத்தை கிட்ட நான் அவங்க கொட்டத்தை அடக்குறேன்னு சொல்லி இருக்காங்க நான் அப்படி சொல்லவே இல்ல என்று சொல்ல அப்ப உனக்கு யாரோ வில்லி ஏற்பட்டு இருக்காங்களா அர்த்தம் நீ வளர்ந்துட்டு வர மீனா அதனால இந்த மாதிரி நடத்த அதிக வாய்ப்பு வாய்ப்பு இருக்கு பாத்துக்கலாம் என்று சொல்லிவிடுகிறார்.
மறுபக்கம் சீதா ஹாஸ்பிடலில் கான்ஸ்டபிள் அம்மாவை கவனித்துக் கொண்டிருக்க அவர் டிபன் வாங்கிக் கொண்டு வருகிறார்.அவருக்கு மாத்திரை கொடுத்து சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்க கான்ஸ்டபிள் அருண் அம்மா மருந்து மாத்திரையை விட நீ கவனிச்சுக்கிறது ரொம்ப நல்லா இருக்குமா என்று சொல்லி பாராட்டுகிறார். அவர்கள் சீதாவை பற்றி விசாரிக்க அம்மா பொன்னியம்மன் கோவிலில் பூ கட்டுவதாகவும் அக்காவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா உன் தம்பி படித்து கொண்டிருப்பதாகவும் சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து மீனா போன் போட்டு எனக்கு நாளைக்கு ஒரு கல்யாணம் ஆர்டர் இருக்கு இல்ல சீதா நீயும் கொஞ்சம் வந்துடு கொஞ்சம் எனக்கு ஹெல்ப் ஆயிருக்கும் என்று சொல்ல சரி வந்துடறேன்கா என்று சொல்லுகிறார்.நீ ஹாஸ்பிடல் ஒருத்தவங்கள பாத்துக்கிட்டேன்னு சொன்னியே எப்படி இருக்காங்க என்று கேட்க நல்லா இருக்காங்க அக்கா நான் உங்ககிட்ட கொடுக்கிறேன் என்று சொல்லி கொடுக்கிறார் அவரும் மீனா விடம் பேச நலம் விசாரித்துவிட்டு சீதாவை பற்றி பெருமையாக பேசுகிறார். மீனாவும் அவ சின்ன பொண்ணா இருந்தாலும் எங்களையும் பொறுப்பா பார்த்துக்கவா என்று சொல்லுகிறார். போனை வைத்துவிட்டு சீதா சரி நாளைக்கு நான் வரமாட்டேன் டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போயிடுங்க என்று சொல்லிவிட்டு போக அருணின் அம்மா அருண் இடம் அருண் இடம் கண்ணை காட்டி காசு கொடுக்க சொல்ல அவர் நிற்க வைத்து பர்சை எடுக்க என்னாச்சு எதுக்கு கொடுக்குறீங்க என்று கேட்க உன் வேலை எல்லாம் விட்டு பார்த்து கிட்ட இல்லம்மா என்ற சொல்லுகிறார். உரிமையா எல்லாம் பேசிட்டு இப்ப காசு கொடுக்கிறீர்களா என்று சீதா கோபப்பட உனக்கு ஏதாவது ஹெல்ப் இருந்தா பண்ண என்று சொல்ல, அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
மறுநாள் காலையில் மீனா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டே ஆர்டருக்கான வேலையும் போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருக்க முத்து வருகிறார்.என்ன மீனா ரெடியா என்று கேட்க ஆயிடுச்சி இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடுங்க என்று சொல்ல நான் இதை சொல்லல, ஆடர்க்கு ஏற்பாடு செயல் உள்ள அதுக்காக சொல்றேன் என்று சொல்ல நான் என்னோட பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி இருக்காங்க நீங்க போய் அதை எடுத்துட்டு வந்து மண்டபத்துல வச்சுடுங்க என்று சொல்ல அப்ப நீ வரலையா என்று கேட்கிறார் நான் மதிய சாப்பாடு செஞ்சுட்டு வந்துடறேன் என்று சொல்ல முத்துவும் மீனாவும் ரொமான்ஸ் செய்து கொள்கின்றனர்.
மறுபக்கம் விஜயா ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க அவருக்கு சிந்தாமணி போன் போட்டு இன்னைக்கு தேதி அஞ்சு உங்க மருமக வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக்கோங்க என்று சொல்ல சரி நான் பாத்துக்குறேன் அவ வரமாட்டேன் என்று சொல்லி ஃபோனை வைத்து ரூமில் இருந்து வெளியே வந்து எல்லோரையும் முதல்ல வீட்ல இருந்து அனுப்பனும் என்று முடிவு எடுக்கிறார். மனோஜ் சாப்பிட்டுக் கொண்டிருக்க இன்னும் எவ்வளவு நேரம் சாப்பிட்டு இருப்ப கிளம்பு கிளம்பு என்று சொல்லுகிறார் ரோகினி இடமும் சீக்கிரம் கெளம்பு ரோகிணி என்று அவசரப்படுத்த அண்ணாமலை ரெடியாகி வர நான் ஸ்கூலுக்கு கிளம்புறேன் என்று சொன்னவுடன் ரொம்ப நல்லதா போச்சு கிளம்புங்க என்று சொல்லுகிறார் இப்ப எதுக்கு அவசரப்படுத்திக்கிட்டு இருக்க இன்னும் நேரம் இருக்கு என்று சொல்ல டிராபிக் ஆயிடும் என்று அனுப்பி வைக்கிறார். ஸ்ருதி வர நீ இன்னும் கிளம்பலையா மா என்று கேட்க கிளம்பிட்டு வந்து ரவி வந்த உடனே கிளம்பிடுவேன் என்று சொல்லுகிறார் உடனே ரவியை கூப்பிட்டு கிளம்புங்க என்று சொல்ல நான் மதியம் லஞ்சுக்கு வர மாட்டேன் அதனால காலைல அண்ணி கையால ஒரு தோசை சாப்பிட்டு போயிடுறேன் என்று சொல்லி உட்கார்ந்து தோசை சாப்பிட விஜயா பரபரப்பாக இருக்கிறார். உடனே அவர்கள் எல்லோரையும் அனுப்பிவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்க முத்து மீனாவிற்கு தோசை ஊற்றி கொடுக்கிறார். நீ சாப்பிட்டது என்ன தான் நான் போவேன் சாப்பிடு என்று சொல்ல விஜயா எப்பவும் இல்லாது இப்பதான் ரொம்ப அக்கறை காட்டுவா என்று சொல்லி முனகி கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
முத்துவும் சென்ற பிறகு மீனாவை அனுப்பாமல் இருப்பதற்கு விஜயா என்ன பிளான் போடுகிறார்?மீனா என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
