நந்தினி போட்ட திட்டம், மாதவிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!
தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைகளத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் கன்னியப்பன் காத்துக் கொண்டிருக்க அருணாச்சலமும் சூர்யாவின் நண்பரும் அவரைக் கூப்பிட்டு அதே மாதிரியே பத்து நிமிஷம் வெயிட் பண்ணு நாங்க கொடுத்த உடனே அதை எடுத்துப் போய் சூர்யா கிட்ட கொடுத்துடு சேம் விஷயம் சேம் பிளான் என்று சொல்லி அவரிடம் காசு கொடுத்து சரக்கு பாட்டிலை வாங்குகின்றனர். அதை நந்தினி காரில் வைத்து சரக்கிற்கு பதில் கசாயத்தை கலக்கிறார். இதெல்லாம் பழைய டெக்னிக் எப்படிமா கண்டுபிடிச்ச என்று சொல்ல அதெல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன் ஐயா என்று சொல்லுகிறார்.
அந்த நேரம் பார்த்து சூர்யாவின் கார் வர அருணாச்சலம் சீக்கிரமா சீக்கிரம் சீக்கிரமா வந்துட்டான் என்று அவசரப்படுத்த நந்தினியும் முடிச்சேன் என்று கலந்து விடுகிறார்.உடனே கன்னியப்பனை கூப்பிட்டு அந்த பேக்கை கொடுத்து விடுகின்றனர். உடனே சூர்யா வந்து என்ன கண்ணியப்பா ரெடியா என்று கேட்க உங்களுக்காக ஸ்பெஷல் சரக்கு ஆர்டர் பண்ணி வர வச்சிருக்கேன் என்று சொல்லி அவரிடம் கொடுக்க சரி நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி பணத்தை கொடுத்து இன்னும் எவ்வளவு வேணா பணம் தர ஆனா போதை தான் முக்கியம் என்று சொல்லி அவரை பணம் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
சூர்யா போனை எடுக்க விவேக் இடம் நந்தினி இப்போ உங்களுக்கு தானே போன் வரும்போது நான் சொன்ன மாதிரி நடிச்சுடுங்க என்று சொல்லுகிறார். ஆனால் சூர்யா அசோகனுக்கு போன் போட்டு லொகேஷன் அனுப்புறேன் வாங்க குடிக்கலாம் என்று கூப்பிடுகிறார். உடனே நந்தினி அவர வரவிடாமல் பண்ணுங்க அவர் வந்தா உண்மையான சரக்கு இல்லன்னு கண்டுபிடிச்சிடுவாங்க ஏதாவது பண்ணுங்க என்று சொல்ல விவேக் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். எப்பவுமே அந்த வீணா போன விவேக்க கூப்பிடுங்க இப்ப என்ன மாப்பிள்ளை என்ன கூப்பிட்டு இருக்க என்று சொல்ல அதெல்லாம் விடுங்க மாமா குடிக்கலாம் என்று சொல்லி சரக்கை ஊட்டுகிறார்.
உடனே விவேக்கும் எனக்கும் ஒரு டம்ளர் ஊத்துங்க என்று சொல்லி வர அந்த நேரம் பார்த்து சூர்யாவிற்கு ஃபோன் வருகிறது. அவர் பேசிக் கொண்டிருக்க அசோகன் அவரிடம் சரக்கு கொடுக்கப் போகும் நேரத்தில் விவேக் அசோகனுக்கு ஊற்றி வைத்த சரக்கைக் கீழே ஊற்றிவிட்டு கோட்டர் மிக்ஸ் பண்ணி விடுகிறார். ஆனால் சூர்யா போன் பேசிக் கொண்டே இருக்க சூர்யாவிடம் சரக்கை கொடுத்துவிட்டு அசோகன் சென்று விடுகிறார். சூர்யாவிற்காக இருவரும் குடிக்காமல் காத்துக் கொண்டிருக்க சூர்யா வந்தவுடன் மூவரும் குடிக்கின்றனர். மீண்டும் சூர்யா வாந்தி எடுக்க அசோகன் சைடிஷ் இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்லுகிறார். எப்படி இருக்கு மாமா நல்லா இருக்கா போதை ஏறுதா என்று கேட்க, செமையா ஏறுது மாப்பிள என்று சொல்ல, விவேக்கிடம் கேட்கிறார் அவரும் எனக்கு தலையே சுத்துது அந்த அளவுக்கு போதை ஏறுது என்று சொல்லுகிறார். அசோகன் சூர்யாவை டிஷ்ஷுக்காக தலையை மோந்து பார்க்கும் நேரத்தில் அசோகனுக்கு மீண்டும் சரக்கை ஊற்றி விடுகிறான். எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆவுது எனக்கு ஏதாவது பாடி பிரச்சனை இருக்கா எனக்கு மட்டும் எதுவும் ஆக மாட்டேங்குதே என்று சூர்யா டென்ஷன் ஆகிறார்.
அசோகன் போதையாக சூர்யா உனக்கு என்ன ஆச்சு மாமா நிஜமாலுமே போதை ஏறுதா என்று கேட்க விவேக்கிடம் உனக்கு எப்படி இருக்கு என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அசோகன் மட்டையாகி விடுகிறார். விவேகும் போதையில் இருப்பது போல் நடிக்க எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது கசாயம் மாதிரி இருக்கே என்று சொல்லுகிறார். அருணாச்சலம் நந்தினியிடம் என்ன நடந்தாலும் இந்த முயற்சியை கைவிட்டு விடக்கூடாது என்று சொல்ல பல நேரம் பார்த்து மாதவியும் சுரேகாவும் எதோ ரகசியம் பேசிக்கிட்டு இருக்காங்க பாருங்க என்று சொல்லுகிறார். அது எதுவும் எதுவும் உதவாத விஷயம் தான் பேசிகிட்டு இருப்பாங்க என்று சொல்லிவிட்டு மாதவி அருணாச்சலத்திடன் உங்க மாப்பிள்ளை எங்க போயிருக்காருன்னு தெரியுமா பா என்று கேட்க கோவிலுக்கு போறதா சொன்னாரு என்று சொல்லுகிறார் உடனே சுந்தரவல்லி வந்து திருப்பி எனக்கு தெரியாம குடும்பமா கோவிலுக்கு போற பிளான் வச்சிருக்கீங்களா என்று சொல்ல அருணாச்சலம் அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா என்று சொல்லுகிறார். உடனே சூர்யா அசோகனை காரில் வீட்டுக்கு கூட்டிட்டு வர அசோகன் சூர்யாவை பிடித்துக் கொண்டு போதையில் தள்ளாடி கொண்டு வருகிறார். இதனைப் பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றன. வழக்கமா சூர்யா தான் இப்படி இருப்பான் இப்ப என்ன மாமா இப்படி இருக்காரு என்று சுரேகா சொல்லுகிறார். உடனே அசோகன் என்ன குடும்பமே குறுகுறுன்னு பாக்குறீங்க நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்க என்று சொல்லுகிறார்.
இவ்வளவு பெரிய அழகனுக்கு உங்க பொண்ணு மாதவியா கட்டி வச்சு தப்பு பண்ணிட்டீங்களே மாமா என்று சொல்ல, அருணாச்சலம் ஏதோ கோவிலுக்கு போறேன்னு சொன்னீங்களே பிரசாதம் எதுவும் எடுத்துட்டு வரலையா என்று சொல்ல, அசோகன் பாக்கெட்டில் தேடி சுண்டல் பாக்கெட் எடுத்து கொடுக்க, சுந்தரவல்லி கடுப்பாகி தட்டி விட்டு என்னடி இதெல்லாம் பொண்டாட்டி தானே நீ இதெல்லாம் கூட பார்க்க மாட்டியா, வீட்ல ஒரு குடிகாரன் இருக்கிறது போதாதா என்று திட்டி விட்டு சுந்தரவல்லி சென்றுவிட மாதவி அசோகனை அழைத்து சென்று விடுகிறார் இவருக்கு மட்டும் எப்படி போதையாகுது டாடி என்று பேசிக் கொண்டிருக்க மீண்டும் ஓடி வந்த அசோகன் இந்த சரக்கையே வாங்கும் மாப்பிள்ளை என்று சொல்லிவிட்டு அந்த கல்யாணத்துக்கும் சரக்கு போதை ஏறுது இந்த ஆளுக்கும் போதை ஏறுது எனக்கு மட்டும் எப்படி எனக்கு ஏதாவது பிராப்ளமா என்று புலம்பி விட்டு செல்ல அருணாச்சலமும் நந்தினியும் சந்தோஷப்படுகின்றனர்.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவை திருத்தணும்னு நாங்க போட்ட பிளானை ஈசியா அவங்க மாமாவ வச்சு உடைக்க பார்த்தாரு.
எல்லாம் நாங்க நினைச்ச மாதிரி நடக்கும்போது என்று சொல்லிவிட்டு நந்தினி அருணாச்சலத்திடம் ஒரு நாட்டு மருந்து இருக்கு அதை டெய்லியும் கொடுத்தால் குடிக்கணும்ன்ற எண்ணமே போயிடும் என்று அருணாச்சலத்திடம் சொல்ல மாதவி கவனித்து விடுகிறார்.
மாதவி நந்தினி இடம் வந்து ஏதோ நாட்டு மருந்துனு பேசுகின்ற எல்லா நாட்டு மருந்து யாருக்கு என்று கேட்கிறார். நந்தினி என்ன சொல்லப் போகிறார் என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
