Web Ads

கோபிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய ராதிகா, அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகா கோபிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப, பாக்யா அதிர்ச்சியாகியுள்ளார்.

baakiyalakshimi serial today episode update 06-02-25

baakiyalakshimi serial today episode update 06-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை தேடி வீட்டுக்குப் போக ராதிகாவின் அம்மா இரண்டு பேரும் இங்கே இல்லை என்று சொல்லி சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார் என்ன சொல்றீங்க எங்க போனாங்க என்று கேட்க எனக்கு எதுவும் தெரியாது நானும் கொஞ்ச நேரத்துல இருந்து போயிடுவேன் என் பொண்ணு ராதிகாவோட வாழ்க்கை இப்படி ஆகணும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல அவ எவ்வளவு கஷ்டத்தை தான் தாண்டி வருவா. ராதிகா என்னை விட்டுப் போயிட்டா அப்போ என்னோட கதி என்னாகிறது என்று சொல்ல உங்க உங்களுக்கு என்ன உங்க குடும்பம் இருக்குல்ல அங்க போங்க என்று சொல்லி கோபியை அனுப்பி விடுகிறார்.

மறுபக்கம் ராதிகா மயூ ஐ பீச்சுக்கு அழைத்து கூட்டிட்டு வந்து நிற்கிறார் என்ன மம்மி எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க உன் கூட பேசறதுக்கு தான் என்று சொல்லுகிறார் கோபியை எனக்கு ஒரு நல்ல பிரண்டா தான் தெரியும் எதேர்ச்சியா சந்திச்சு கிட்டபோது அவரோட ஃபேமிலி சரியில்லைன்னு சொன்னாரு உன்னோட நல்லதுக்காக யோசிச்சு தான் நான் இந்த முடிவு எடுத்த என்னோட க்ளோஸ் பிரண்ட் பாக்யா அவரோட ஒய்ஃப்ன்னு தெரியாது தெரிஞ்சதுக்கப்புறம் ஒதுங்க என் மனசு இடம் கொடுக்கல ஆனா நான் எடுத்திருக்கிறது எவ்வளவு பெரிய தப்பான முடிவிலே எனக்கு அப்புறம் என்ன தெரியும் இனிமே உன் லைஃப்ல அப்பான்னு ஒருத்தர இன்ட்ரடியூஸ் பண்ணுது மிகப்பெரிய தப்பு. உனக்காக நான் இருக்க மயூ என்ற சொல்லுகிறார். இனிமே கோபி நம்ம லைஃப்ல கிடையாது என்று சொல்லி மயூவிடம் ராதிகா மன்னிப்பு கேட்க நீங்க எதுக்கு மம்மி என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க எனக்கு அதுதான் கஷ்டமா இருக்கு ஒன்று சொல்ல நீ ரொம்ப மெச்சுடான பொண்ணு மையம் எல்லாத்தையுமே புரிஞ்சிக்கிற இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் அவங்க அம்மா அப்பா கிட்ட எவ்வளவு சண்டை போடுறாங்க ஆனா நீ அது மாதிரி எதுவுமே பண்ணது கிடையாது ஏன் என்று என்று கேட்க அதற்கு மயூ நீங்க எது பண்ணாலும் என்னோட நல்லதுக்காக தான் மம்மி பண்ணீங்க அப்புறம் நான் எதுக்கு கேக்கணும் என்று சொல்ல ராதிகா மயூவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இனிமே நான் வாழுற ஒவ்வொரு நிமிஷமும் உனக்காக தான் மயூ இதுக்கு முன்னாடி நடந்த எல்லாத்துக்கும் சாரி என்று சொல்லுகிறார்.

செல்வியும் பாக்கியாவும் பேசிக்கொண்டிருக்க செல்வி கோபி சார் அங்க போயிருக்காரு திரும்பிய இங்கு வருவாரா அப்படியே ராதிகா மேடத்துக்குடியே இருந்துருவாரா உங்க மாமியார் என்ன பண்ணுவாங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்க எதுக்கு நீ இப்படி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க அவரு அவங்க கூட வாழ்ந்த சந்தோஷம் தானே என்று சொல்ல திடீர்னு இங்க கூட்டிட்டு வந்துட்டா என்ன பண்ணுவ என்று சொல்ல நான் விடமாட்டேன். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழட்டும் ஆனால் இங்கு தேவையில்லை என்று சொல்ல அதற்கு செல்வி மறுபடியும் உங்க மாமியார் என் பையன் என் கூட தான் இருக்கணும்னு சொன்னா என்ன பண்ணுவ என்று சொல்ல அதற்கு நான் வேறு எங்கேயாவது போயிடுவேன் என்று சொல்லுகிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்க கோபிக்கு ஒரு லெட்டர் வருகிறது. அதனை பாக்யா வாங்கி வைக்க கொஞ்ச நேரத்தில் கோபி வந்தவுடன் கோபியிடம் கொடுத்து விடுகிறார்.

கோபி சோகமாக வந்து சோபாவில் உட்கார ஈஸ்வரி என்னாச்சுடா ஏன் எப்படி இருக்க என்று கேட்க ராதிகாவும் மயூ,வீட்டில் இல்லமா அவங்க எங்கேயோ போயிட்டாங்க எங்கயோ போயிருக்காங்கன்னு சொல்றாங்க என்று சொல்லுகிறார் போன் பண்ணாலும் சுவிட்ச் ஆப்ண்ணு வருது என்று சொல்ல ஈஸ்வரி வழக்கம் போல் ராதிகாவை திட்டுகிறார். உடனே கோபி அங்கிருந்து ரூமுக்கு எழுந்து போக முடிவெடுக்க ஏதாவது சாப்பிடறியா கோபி என்று கேட்கிறார் எனக்கு எதுவும் வேணாம்மா நான் ரூமுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொன்னார் இனியா டாடி லெட்டர் இருக்கு என்று சொல்லி கையில் எடுத்து பார்க்க அது கோர்ட்டில் இருந்து வந்ததாக சொல்லுகிறார்.

உடனே அதிர்ச்சியான கோபி பிரித்துப் பார்த்து ஒன்றும் பேசாமல் அதிர்ச்சியாக நிற்க செழியன் பார்த்தும் அதிர்ச்சி ஆகிறார். என்னதான் இருக்கா அதெல்ல என்று ஈஸ்வரி கேட்கிறேன் அவங்க டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே கோபி தட்டு தடுமாறி ராதிகா என்னை விட்டுப் போகவே முடிவு எடுத்துட்டாளா என்று கலங்கி நிற்கிறார். நான் ரூமுக்கு போகிறேன் என்று சொல்லி கோபி சென்று விட பாக்யா அதிர்ச்சியாக நிற்கிறார்.

ராதிகாவிற்கு பாக்கியா போன் பண்ணுவாரா கோபி என்ன செய்யப் போகிறார்? ராதிகாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 06-02-25

baakiyalakshimi serial today episode update 06-02-25