மீனாவிற்கு கிடைத்த பெரிய ஆர்டர்,அருணை வெறுப்பேற்றிய முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைக்க, அருணை முத்து வெறுப்பேற்றியுள்ளார்.

siragadikka asai serial today episode update 06-02-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவும் ரோகிணியும் வண்டியில் வந்து கொண்டிருக்க வித்யா வண்டியை நிறுத்தி அவனுக்கு எவ்வளவு திமிரு இருந்தா என்ன அக்கவுண்ட்ஸ் பார்க்க வர சொல்லுவா என்று சொல்ல உடனே ரோகினி பார்ட் டைம் ஜாப் மாறி நல்ல விஷயம் தானே பாரு என்று சொல்ல அப்புறம் என்ன தூக்கி ஜெயில்ல உட்கார வைக்கவா என்று வித்யா கேட்கிறார்.
அந்த நேரம் பார்த்து மீனா வண்டியில் போக வித்யா மீனாவை நிறுத்தி ஓடி வந்து லைஃப் பார்ட்னர் தேர்ந்தெடுக்கத்தை பற்றி சொன்னீர்கள் அல்ல அவர் கிட்ட இருந்து நான் போனை எப்படி வாங்குவது என்று கேட்க இன்னொருவாட்டி அவர் உங்களை பார்க்க வந்தார்னா எதுக்கு பாக்க வர்றீங்கன்னு கேளுங்க உங்கள புடிச்சி இருக்குன்னு சொல்லுவாரு அப்ப நான் உங்கள பத்தி எப்படி தெரிஞ்சிக்கிறதுன்னு சொல்லி போன் வாங்கிடுங்க என்று சொல்ல வித்யா ரொம்ப தேங்க்ஸ் மீனா என்று சொல்லுகிறார் உடனே ரோகினி கூப்பிட என்ன விட உனக்கு அவ்வளவு வேணுனா முக்கியமான விஷயம் என் கிட்ட கூட சொல்ல மாட்டியா என்று சொல்ல கூடிய சீக்கிரமே சொல்ற என சொல்லிவிட்டு இருவரும் வண்டியில் கிளம்புகின்றனர்.
மறுபக்கம் முத்துவும், செல்வமும் சாப்பிட வர டிராபிக் கான்ஸ்டபிள் அதே கடைக்கு சாப்பிட வருகிறார் முத்து அவரை கவனித்த பிறகு வேண்டும் என்று வம்பு இழுத்து வெறுப்பேற்றும் படி பேசுகிறார். செல்வத்திடம் தேவையில்லாமல் கேஸ் போடுவாங்க கேஸ் கிடைக்கலைன்னா என்ன பண்றது என்று எல்லாம் வெறுப்பேற்ற ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான கான்ஸ்டபிள் சாப்பாடு தட்டை விசிவிட்டு முத்து சட்டையை பிடிக்க இது பப்ளிக் பிளேஸ் இந்த இடத்துல இப்படித்தான் கை வைப்பீங்களா என்று சொல்லி இந்த மாதிரி வெச்சா வீடியோ எடுத்து போட்டு ட்ரெண்டாக்கி விட்டுருவாங்க என்று சொல்ல சிலர் கையில் இருக்கும் மொபைல் பார்த்து கான்ஸ்டபிள் கையை எடுத்து விடுகிறார். பிறகு உன்னை சும்மா விடமாட்டேன் என்று மிரட்டி விட்டு போக செல்வம் யார் இது என்று கேட்கிறார் பாட்டி பிரச்சனை இல்ல தள்ளிவிட்டு கார்ல எடுத்துட்டு போனது இவர்தான் என்று சொல்ல எதுக்குடா போலீஸ் கிட்ட பிரச்சனை நம்ம தொழிலுக்கு அது என்னைக்குமே சிக்கல் தான் என்று சொல்ல பார்த்துக்கலாம் என்று சொல்லுகிறார்.
உடனே செல்வத்திற்கு சவாரி வந்துவிட அவர் கிளம்புகிறார் முத்து சாப்பிட்டு கொண்டு இருக்க, செல்வம் காரை எடுக்க வெளியே வந்து எடுக்கும்போது கான்ஸ்டபிள் கார் நம்பரை பார்த்துக் கொள்கிறார். மறுபக்கம் மீனா அம்மாவின் பூக்கடைக்கு வர அங்கு சீதாவும் அம்மாவும் இருக்கின்றனர் சீதாப்பூவை வாங்கி வைத்துவிட்டு நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா போகணும் என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க ஒரு அம்மாவை அட்மிட் பண்ணி இருக்காங்க நான் அவங்கள நான் தான் பாத்துக்கணும் வேற யாரோ ஆள் இல்லைன்னு சொன்னாங்க சரி பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன் என்று சொல்லிவிட்டு அவங்களுக்கு கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் இன்னைக்கு எடுக்கணும் வேற யாராவது இல்ல நான் போயிட்டு வரேன் என்று சொல்ல உடனே மீனா உனக்கு அப்பா ஓட குணம் அப்படியே இருக்கு அப்பாவும் ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ணனும்னா இருக்கிற வேலையை அப்படியே விட்டுட்டு போயிடுவாரு என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். சத்யா எங்கே என்று அம்மாவிடம் கேட்க அவன் ஏதோ ப்ரொபஷன பாக்க போனதா சொன்னா என்று சொல்லுகிறார்.
உடனே சத்யா வர நானே உனக்கு போன் பண்ணனும்னு நெனச்சி இருக்கா என்று சொல்ல, என்ன விஷயம் டா என்று கேட்க ப்ரொபசர பார்க்க போயிருந்த என்று சொல்லுகிறார், பிறகு உனக்கு கல்யாணம் ஆர்டர் ஒன்னு கிடைச்சிருக்கு என்று சொல்ல மாலை தேவையா என்று கேட்கிறார்.இல்லகா இப்பதான் நீ டெக்கரேஷன் ஆர்டர் எடுக்குற இல்ல அதுக்கு தான் என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார். ஏற்கனவே ஒரு வாட்டி நம்ம இத பத்தி சொன்னதுனால அவரு ஞாபகம் வச்சு கூப்பிட்டு இருக்காரு அதுவும் மண்டபம் ரொம்ப பெருசு என்று சொல்ல, ரொம்ப சந்தோஷப்படுகிறார் உடனே சத்யா ப்ரொபஸருக்கு போன் போட்டு கொடுக்க மீனா அவரிடம் பேசி விடுகிறார். அவரும் சம்மதித்து விட்டதாக சொல்லி சந்தோஷமாக வீட்டுக்கு கிளம்புகிறார்.
மீனா வீட்டில் உட்கார்ந்து கொண்டே டெக்கரேஷனுக்கான ஏற்பாடுகள் எப்படி செய்வது என்று பேப்பரில் வரைந்து கொண்டிருக்க முத்து வருகிறார் வாங்க சாப்பிடுங்க என்று சொல்ல இன்னிக்கு என்ன உன் முகத்தில் ரொம்ப சந்தோஷம் அதிகமா தெரியுது என்று சொல்ல எப்படி கண்டுபிடிச்சீங்க என்று கேட்கிறார் என்ன விஷயம் என்று கேட்க ஒரு பெரிய மண்டபத்துக்கு ஆடர் வந்திருப்பதாக சொல்லுகிறார் இது முதல்ல நடக்கிறதா நீ எப்பவுமே பண்ணிட்டு தான் இருக்கேன் என்று சொல்ல அதெல்லாம் சின்னதுங்க இது ரொம்ப பெருசு ஒரு பெரிய மண்டபம் ஃபுல்லா நம்ம மட்டும் பண்ண போறோம் என்று சொல்லுகிறார் இதனால் முத்துவும் சந்தோஷப்பட ஆனா காசு கொஞ்சம் அதிகமாகும்ல என்று யோசிக்கின்றனர்.
மீனா கணக்கு போட்டு பார்த்து 50 ஆயிரம் தேவைப்படுது என்று சொல்லுகிறார். மீனா ரவி ஸ்ருதியிடம் கேட்கலாம் என்று முடிவெடுக்க முத்து சம்மதிக்கிறாரா ?இல்லையா? என்பதை பார்க்கலாம்.

siragadikka asai serial today episode update 06-02-25