உச்சக்கட்ட கோபத்தில் சூர்யா, அர்ச்சனா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update
நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்தை குடிக்க சொல்லுகிறார். முதலில் கல்யாணம் குடிக்க மறுக்க டென்ஷன் ஆகி சூர்யா குடிக்க சொல்ல, கல்யாணமும் நந்தினியை பார்த்து நடிக்க ஆரம்பிக்கவா என்று சொல்லி குடித்துவிட்டு போதையானது போல் நடிக்க சூர்யா மீண்டும் டென்ஷன் ஆகிறார் இத குடிச்சு உனக்கு போதை ஆகுதா என்று கேட்க, நீங்க தப்பா நினைக்கலனா நான் இன்னொரு வாட்டி ஊட்டி குடிக்கவா என்று சொல்ல மீண்டும் கல்யாணம் குடிப்பதை பார்த்து சூர்யா என்னையா பண்ணுது என்னையா பண்ணுது என்று சொல்லி எனக்கு டென்ஷன் ஆவுது சொல்லு என்று சொல்லுகிறார்.
இவனுக்கு ஏறுது அவனுக்கு ஏறுது எனக்கு மட்டும் ஏன் போதை ஏறல என்று புலம்ப அவருக்கு போதை இருக்கு நீங்க ஏன் இப்படி பேசிகிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார் நந்தினி. உடனே கல்யாணம் அவரே சரக்கை ஊத்தி குடித்து மாத்தி மாத்தி வாய்ஸ் பேசி அலப்பறை செய்ய சூர்யா ஒன்றும் புரியாமல் குழம்பித் தவிக்கிறார். கல்யாணம் குடித்துக் கொண்டே இருக்க வேஷ்டி அவிழ்ந்து விழுவது கூட தெரியாமல் இருப்பது போல் நடிக்க உடனே மிஸ்டர் சூர்யா என்று சொல்ல அதற்கு சூர்யாவா என்று அதிர்ச்சி அடைகிறார். பிறகு கல்யாணம் சூர்யாவையே கட்டிவிட சொல்ல அவரும் கட்டி விடுகிறார். பிறகு கல்யாணம் நான் உங்களுக்கு ஒரு கதை சொல்ற என்று அவருடைய லவ் ஸ்டோரியை சொல்ல, சூர்யா நானே போதை ஏறலன்ற டென்ஷன்ல இருக்க இந்த கருமாந்திரக் கதை வேறயா இவன கூட்டிட்டு போனது நீ என்று சொல்லி துரத்தி விடுகிறார். மீண்டும் சரக்கை எடுத்து சூர்யா குடிக்க புடிக்காமல் மீண்டும் புலம்பி தவிக்கிறார். உங்களுக்கெல்லாம் என்னடா பிரச்சனை என்று பேசிக் கொண்டிருக்கிறார் நந்தினியும் கல்யாணமும் கீழே இறங்கி வர நந்தினி சூப்பர்னே என்று சொல்லுகிறார்.
உடனே கீழே வந்த சூர்யாவை பார்த்தவுடன் கல்யாணம் மீண்டும் நடிக்க, சுந்தரவல்லி எதிரில் வந்து நிற்க கல்யாணம் அதிர்ச்சி அடைந்து சமாளிக்க, ஐயா நீங்க இன்னும் தூங்கலையா என்று கேட்க, சுந்தரவல்லி அவன் குடிச்சிட்டு பண்ற அழுச்சாட்டியுமே தாங்க முடியல இதுல நீ வேறயா என்று ஓங்கி அறைய நந்தினி அங்கிருந்து நைசாக நழுவி விடுகிறார். உடனே கல்யாணம் அடுத்த ரவுண்டுக்கு கூப்பிடு சூர்யா என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். சூர்யா டென்ஷனில் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்று அங்குமிங்கும் நடந்து தவித்துக் கொண்டிருக்க நந்தினி பார்த்து கொண்டு இருக்கிறார். அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வந்து நந்தினி இடம் பேசுகிறார்.
உடனே சூர்யா அருணாச்சலத்தை பார்த்து கூப்பிடுகிறார். எனக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கு டாடி ஒரு நாளைக்கு நான் எவ்வளவு குடிப்பேன். நானா இவ்வளவு நாள் குடிச்ச அதே சரக்கு தான் குடிக்கிறேன் எனக்கு போதை ஏற மாட்டேங்குது என்று சொல்ல அருணாச்சலமும் இன்னிக்கு ஓவரா குடிச்சிட்டு போதை அதிகமாயிடுச்சா என்று கேட்க விவேக் குடிச்சா அவனுக்கு போதை ஆகுது கல்யாணம் குடிச்சா அவனுக்கு போதை ஆகுது ஆனா எனக்கு மட்டும் போதை ஏற மாட்டேங்குது என்று சொல்ல, இப்ப எதுவும் நீ போதையில் உலரல என்று கேட்க சத்தியமா இல்ல டாடி, எனக்கு இப்போ கொஞ்சமா குடிக்கணும் டாடி எனக்கு கொஞ்சமா சரக்கு குடுங்க என்று சொல்ல, உனக்கு ஏதாவது உடம்புக்கு பிரச்சனையாவா டாக்டர்கிட்ட போகலாம் என்று சொல்ல உன்கிட்ட போய் சொன்னா பாருங்க என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார் சூர்யா.
உடனே நந்தினி வந்தவுடன் ரொம்ப நல்ல விஷயம் பண்ணி இருக்கமா ஆனா இவ்வளவு நேரம் குடிக்காம இருந்ததே பெரிய விஷயம் இதுக்கப்புறம் குடிக்க கூடாது என்று சொல்ல இதுக்கு அப்புறம் என்னையா பண்றது என்று கேட்க நான் எதுவும் சொல்லல உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். கிச்சனில் நந்தினி சமைத்துக் கொண்டு இருக்க ரேணுகா பில்டர் காபி போடுவது தெரியாது என்று சொன்னார் நந்தினி சொல்லி கொடுத்து, அதனை ரேணுகாவிடம் கொடுத்து அம்மா கிட்ட கொடுத்துடு என்று சொல்லுகிறார்.முதலில் மறுத்த ரேணுகா அப்புறம் எப்படி பழகும் அவங்க கேக்குறதுக்கு மற்றும் பதில் சொல்லு என்று அனுப்பி வைக்கிறார். உடனே சுந்தரவல்லி ரேணுகாவை பார்க்காமலேயே என்ன விஷயம் எந்த ஊர் என்பதையெல்லாம் விசாரித்துவிட்டு இந்த வீட்டுக்கு கௌரவம் இருக்கு பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்க சுத்த பத்தமா வச்சுக வேண்டும்.இங்க உட்கார்ந்து புரளி பேசுறதோ இங்க நடக்கிறதாக சொல்றது அங்க நடக்கிறது என்று சுத்தமா இருக்கக்கூடாது. அதைவிட முக்கியமான ஒரு விஷயம் அந்த கிச்சன்ல இருக்கறவங்க கிட்ட பேச்சுவார்த்தையை இருக்கக் கூடாது என்று சொல்ல அவரும் சரி என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கிச்சனுக்கு வந்த ரேணுகாவிடம் நந்தினி குடுத்துட்டியா என்று கேட்க கொடுத்துட்டேன்கா என்று சொல்லிவிட்டு நந்தினி இந்த குழம்பு ஆப் பண்ணிடு எனக்கு மேல வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு சென்றுவிட அர்ச்சனா அந்த நேரம் பார்த்து ரேணுகாவிற்கு போன் போடுகிறார்.
மறைந்து வந்து ரேணுகா போனை எடுக்க அர்ச்சனா உனக்கு போனை எடுக்க இவ்வளவு நேரமா என்று சொல்லிவிட்டு என் பெயரை என்ன சேவ் பண்ணி வச்சிருக்க என்று கேட்க அர்ச்சனா மேடம் என்று சொல்ல இன்னும் என் அட்ரஸோட சேர்த்து சேவ் பண்ணிடு எல்லாம் முடிஞ்சிடும் என்று சொல்ல, நந்தினி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா என்று கேட்க ரூம்ல தான் இருக்காங்க என்று சொல்லுகிறார். முதல்ல சூர்யாவை நந்தினியும் புருஷன் பொண்டாட்டியா வாழறாங்களான்னு எனக்கு தெரியணும் அதுக்காக இப்போ நீ ஒரு வீடியோ கால் பண்ணி நேரா அந்த ரூமுக்கு போய் கேஷுவலா கல்யாண வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு என்றத போய் பேசு நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அனுப்புகிறார். ரேணுகாவும் வீட்டில் இருக்கும் அனைத்தையும் வீடியோ காலில் காட்டிக் கொண்டு வர நந்தினியும் சூர்யாவும் இருக்கும் போட்டோவை பார்த்து காட்ட சொல்லுகிறார். பிறகு சரி ரூமுக்கு போ என்று சொல்ல அங்கு நந்தினி துணியை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அங்கு இருக்கும் பாய் மற்றும் தலையணையை பார்த்து அப்போ தனித்தனியா தான் தூங்குகிறீர்களா என்று தெரிந்து கொள்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சரக்கு பாட்டிலை தூக்கி போட்டு உடைத்து நான் வேணா வேணா என்று சொல்றனே புரியலையா உனக்கு என்று அசோகனை திட்ட நந்தினி சிரிக்கிறார்.
மறுபக்கம் அர்ச்சனா நான் சூர்யாவா அடைந்தே ஆகணும் அதுக்கு அந்த நந்தினி அந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று மினிஸ்டரிடம் சொல்லுகிறார். நந்தினி அருணாச்சலத்திடம் நானே சூர்யா சார் எங்க குடிச்சுருவாரோ நம்ம திட்டம் எல்லாம் வேஸ்ட்டா போயிடுமோ என்று நினைத்தேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update