ஷங்கர் இயக்கும் ‘வேள்பாரி’ படத்தில் ஹீரோவாக சூர்யா?

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..

‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு, ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாக ஷங்கர் பல நிகழ்வுகளில் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அதன் ஹீரோ யார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

தற்போது ‘வேள்பாரி’ படத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஷங்கர் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ‘வேள்பாரி’ படத்தில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என இணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

ஒரு சிலர் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக பல்வேறு நடிகர்களை வேள்பாரி நாயகனாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இந்த விவாதத்தினால் #Shankar என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதன் தயாரிப்பாளர், நடிகர் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் இன்னும் முடிவாகவில்லை.

‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு, ‘இந்தியன் 3’ பணிகளைத் தொடங்கவிருந்தார் ஷங்கர். ஆனால், ‘இந்தியன் 2’ படத்தின் தோல்வியால், 3-ம் பாகத்தின் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘வேள்பாரி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் என்றும், இதில் நாயகனாக சூர்யா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

who is the hero of director shankar in velpari movie
actor suriyadirector shankarvelpari movieஇயக்குநர் ஷங்கர்வேள்பாரி