ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’, 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உருவெடுத்துள்ளது.
ஒளிபரப்பான நாள் முதல் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் வாரந்தோறும் வெளியாகும் புதிய எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தைத் தாண்டியும் பல்வேறு மொழி ரசிகர்களிடம் இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘ரிசார்ட்’ தொடரின் மொத்த வாட்ச் டைமில் 53% தமிழக பார்வையாளர்களிடமிருந்தும், 47% தமிழகத்திற்கு வெளியிலிருந்தும் கிடைத்துள்ளது. இதில் 22% இந்தி பார்வையாளர்களிடமிருந்தும், 15% தெலுங்கு பார்வையாளர்களிடமிருந்தும், 10% மலையாளம் மற்றும் கன்னட பார்வையாளர்களிடமிருந்தும் கிடைத்துள்ளது.
இந்த வெற்றி, ஜியோஹாட்ஸ்டாரின் ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ என்ற நீண்டகால கதை சொல்லல் முயற்சிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து புதிய எபிசோடுகளை வெளியிடுவதன் மூலம் பார்வையாளர்களை நீண்டகாலம் தொடருடன் இணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த சாதனை குறித்து ஜியோஸ்டாரின் சவுத் கிளஸ்டர் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் பிரிவின் தலைவர் கிருஷ்ணன் குட்டி கூறுகையில், ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்தது ஜியோஹாட்ஸ்டாருக்கு முக்கியமான மைல்கல் என்றும், இது ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தொடரின் மொத்த பார்வை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி தமிழ் மொழிக்கு வெளியிலுள்ள பார்வையாளர்களிடமிருந்து கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், உண்மையான கதைகள் மொழிகளைக் கடந்து நாடு முழுவதும் ரசிகர்களை சென்றடையும் என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘ரிசார்ட்’ தொடருக்கு டிடிகே பிரஸ்டீஸ் கோ-பிரசன்டிங் ஸ்பான்சராக உள்ளது. லலிதா ஜூவல்லரி மார்ட், காலீஸ்வரி ரிஃபைனரி மற்றும் பிரபாஸ் விகேர் ஹெல்த் கிளினிக் ஆகியவை ஸ்பெஷல் பார்ட்னர்களாக இணைந்துள்ளன.
பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரிசார்ட்’ தொடரில் விஜய் குமார் ராஜேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆர்.ஆர். ரிசார்ட்டில் ஹவுஸ்கீப்பிங் ஊழியராக பணியாற்றும் வெற்றி, சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். அந்த ரிசார்ட்டைச் சுற்றியுள்ள லட்சியங்கள், உறவுகள் மற்றும் பல்வேறு சவால்களை வெற்றி எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே தொடரின் மையக்கதை.
‘ரிசார்ட்’ தொடரை ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக காணலாம்.