‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் 25-வது நாள் படப்பிடிப்பு சென்னை ECR பகுதியில் உள்ள நட்சத்திர பங்களா ஒன்றில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சண்முக பாண்டியன், ஷிவானி ராஜசேகரன், ஜெயப்பிரகாஷ், சாரா, கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுபிக்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் எம்.பியுமான எல்.கே. சுதீஷ் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் வருகை தந்து படக்குழுவினரை சந்தித்தார். இயக்குநர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்வி ஆகியோர் காட்சிகளை படமாக்கும் விதத்தை நேரில் பார்வையிட்டு ரசித்த அவர், படக்குழுவினருடன் கலந்துரையாடினார்.
“படத்தின் பூஜைக்குப் பிறகு இன்று தான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளேன். சுமார் ஒரு மாத காலமாக டெல்லியில் நாடாளுமன்ற பணிகளில் இருந்தேன். மீண்டும் படப்பிடிப்பு தளத்தை பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது” என்று எல்.கே. சுதீஷ் தெரிவித்தார்.
தொடர்ந்து படக்குழுவினருடன் அமர்ந்து மதிய உணவு அருந்திய அவர், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
‘வாணவேடிக்கை’ படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தை திரு இயக்குகிறார். ஆர்வி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
கலை இயக்குநராக ராஜ்கமல், சண்டைப் பயிற்சியாளராக ஆக்ஷன் சந்தோஷ், ஸ்டில்ஸ் பணிக்கு சிற்றரசு, டிசைனராக செல்வா, காஸ்டியூம் டிசைனராக ஜீவ காருண்யா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
AG ராஜா மற்றும் PR மோகன் ஆகியோர் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்களாக உள்ளனர். PRO-வாக கேப்டன். MP ஆனந்த் பணியாற்றுகிறார்.
இப்படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாகவும், ஷிவானி ராஜசேகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஜெயப்பிரகாஷ், பருத்திவீரன் சரவணன், சாரா, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கும்கி அஸ்வின், இந்துமதி, ஸ்டில்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.