சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஃபீல் குட் குடும்ப திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளார். படத்தின் டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக, ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், அவரது பழைய வசீகரமான நடிப்பு பாணியை ரசிகர்களுக்கு நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், பங்களன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த ஆண்டின் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு:

• எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
• தயாரிப்பாளர்கள் : சூர்யதேவர நாக வம்ஷீ & சாயி சௌஜன்யா
• இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
• ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
• படத்தொகுப்பு : நவீன் நூலி
• தயாரிப்பு வடிவமைப்பு : பங்களன்
• சண்டை பயிற்சி : V. வெங்கட்
• தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
• வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

Mamitha BaijuRadhika SarathkumarRaveena TandonsuriyaVenky AtluriVishwanath & SonsVishwanath & Sons Set For Grand Worldwide Release On August 14thசூர்யாவிஸ்வநாத் & சன்ஸ்